/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பாக்கு மட்டை தட்டுகளுக்கு தடை கர்நாடக விவசாயிகள் பரிதவிப்பு
/
பாக்கு மட்டை தட்டுகளுக்கு தடை கர்நாடக விவசாயிகள் பரிதவிப்பு
பாக்கு மட்டை தட்டுகளுக்கு தடை கர்நாடக விவசாயிகள் பரிதவிப்பு
பாக்கு மட்டை தட்டுகளுக்கு தடை கர்நாடக விவசாயிகள் பரிதவிப்பு
ADDED : ஜூன் 04, 2025 11:20 PM

பெங்களூரு: பாக்கு மட்டைத் தட்டுகள் இறக்குமதிக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. இதன் விளைவாக, பாக்கு மட்டைத் தட்டுகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பரிதவிக்கின்றனர்.
கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் பாக்கு மட்டைகளை பயன்படுத்தி தட்டுகள் உற்பத்தி செய்கின்றனர். இது, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவுகின்றன.
பல்வேறு வெளிநாடுகளுக்கும் பாக்கு தட்டுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாதவை என்பதால், இத்தகைய தட்டுகளுக்கு டிமாண்ட் உள்ளது.
இந்நிலையில் பாக்கு மட்டைத் தட்டுகளில், புற்றுநோய்க்கு காரணமான அம்சங்கள் இருப்பதாக, காரணம் காட்டி, பாக்குத் தட்டுகள் இறக்குமதிக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.
இதனால் கர்நாடகாவில் இந்த தொழிலுக்கு, பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஷிவமொக்காவில் பாக்குத் தட்டுகளுக்கு மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், இந்த தொழிலை நம்பி வாழ்கின்றனர்.
ஷிவமொக்கா மாவட்டத்தில், பாக்கு மட்டைத் தட்டு உற்பத்தி, முக்கியமான வர்த்தகம். இதுவே தீர்த்தஹள்ளி, ஹொசநகர் தாலுகா விவசாயிகளின் முக்கியமான வருவாய். இப்போது அமெரிக்க பாக்கு மட்டைத் தட்டுகளுக்கு தடை விதித்ததால் விவசாயிகள், தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இதுகுறித்து, ஷிவமொக்கா தொழிற் சங்கச் செயலர் விஸ்வேஸ்வரய்யா கூறியதாவது:
மாவட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட பாக்கு மட்டைத் தட்டு உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன, அவற்றில் 8,000 முதல் 10,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். 20 ஆண்டுகளாக வாழ்வாதாரத்துக்கு, பாக்கு மட்டைத் தட்டுத் தொழிலை நம்பி வாழ்கின்றனர்.
குறைந்தபட்சம் அரை ஏக்கர் முதல், இரண்டு ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள பாக்கு விவசாயிகளுக்கு, பாக்கு மட்டைத் தட்டு உற்பத்தி லாபகரமான தொழிலாக உள்ளது. இப்போது அமெரிக்கா பாக்கு மட்டைத் தட்டுகளுக்கு தடை விதித்துள்ளதால், விவசாயிகளிடம் பாக்கு மட்டைகளை வாங்க, தொழிற்சாலைகள் தயங்குகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.