/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடக ஹிந்து நாடார் அசோசியேஷன் டிச., 7ல் ஆண்டு பொதுக்குழு கூட்டம்
/
கர்நாடக ஹிந்து நாடார் அசோசியேஷன் டிச., 7ல் ஆண்டு பொதுக்குழு கூட்டம்
கர்நாடக ஹிந்து நாடார் அசோசியேஷன் டிச., 7ல் ஆண்டு பொதுக்குழு கூட்டம்
கர்நாடக ஹிந்து நாடார் அசோசியேஷன் டிச., 7ல் ஆண்டு பொதுக்குழு கூட்டம்
ADDED : நவ 10, 2025 04:25 AM

கலாசிபாளையா: கர்நாடக ஹிந்து நாடார் அசோசியேஷன் சார்பில் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் டிச., 7ம் தேதி நடத்த, மாதாந்திர செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு கலாசிபாளையாவில் உள்ள கர்நாடக ஹிந்து நாடார் அசோசியேஷன் அலுவலகத்தில், தலைவர் தியாகராஜன் தலைமையில் நேற்று மாதாந்திர செயற்குழு நடந்தது.
கூட்டத்தில், டிச., 7ம் தேதி பெங்களூரு வசந்த் நகரில் உள்ள கர்நாடக மாநில பில்லியர்ட்ஸ் சங்கத்தில், சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
நிர்வாகிகள், தலைவர், செயலர், பொருளாளர் பதவியை ஏற்க விரும்புவோர், தங்கள் மனுவை, சங்கத்தில், டிச., 1ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். உறுப்பினர்களின் விருப்பப்படி, ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ள புதிய நிர்வாகிகள், தலைவர், செயலர், பொருளாளர் ஆகியோர் பதவி ஏற்றுக் கொள்வர்.
பொதுக்குழு கூட்டம் முடிந்ததும், 'கல்யாண மாலை' நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள், கிருஷ்ணவேணி 94497 45948 என்ற மொபைல் எண்ணில், டிச., 1ம் தேதி மாலை 5:00 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
கல்யாண மாலைக்கு பின், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
பொருளாளர் ஜவஹர், துணை செயலர் சீனிவாசன், உறுப்பினர்கள் விஜய் குமார், முருகன், பாலமுருகன், லதா கடற்கரை, லோகனாதேவி, காமராஜ் என்கிளேவ் தலைவர் சுந்தரேசன், பொருளாளர் சரவண ராஜ், முன்னாள் தலைவர் சந்திரசேகரன், முன்னாள் துணைத் தலைவர் சுரேஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

