/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதலீட்டுக்கு நம்பகமான இடம் கர்நாடகா தொழில்நுட்ப மாநாட்டில் முதல்வர் பெருமிதம்
/
முதலீட்டுக்கு நம்பகமான இடம் கர்நாடகா தொழில்நுட்ப மாநாட்டில் முதல்வர் பெருமிதம்
முதலீட்டுக்கு நம்பகமான இடம் கர்நாடகா தொழில்நுட்ப மாநாட்டில் முதல்வர் பெருமிதம்
முதலீட்டுக்கு நம்பகமான இடம் கர்நாடகா தொழில்நுட்ப மாநாட்டில் முதல்வர் பெருமிதம்
ADDED : நவ 19, 2025 08:21 AM

பெங்களூரு: ''மாநில அரசின் தெளிவான கொள்கை, எளிதான அனுமதி, திறன்கள், உள்கட்டமைப்பு, ஆதரவான சூழல் ஆகியவையே, கர்நாடகாவை நாட்டின் மிகவும் நம்பகமான முதலீடு செய்யும் இடமாக மாற்றி உள்ளன,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் நேற்று, இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களின் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்ப துறை ஆகியவை ஏற்பாடு செய்திருந்த, பெங்களூரு தொழில்நுட்ப 28வது உச்சி மாநாட்டை முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்.
3 கொள்கை அறிமுகம் அவர் பேசியதாவது:
இந்த உச்சி மாநாடு, கர்நாடக தகவல் தொழில்நுட்ப கொள்கை 2025 - 2030; விண்வெளி தொழில்நுட்ப கொள்கை 2025 - 2030; ஸ்டார்ட்அப் கொள்கை 2025 - 2030 ஆகிய மூன்று கொள்கைகளை வகுத்துள்ளது.
வரும் 2034க்குள், கர்நாடகாவை நாட்டின் முன்னணி விண்வெளி தொழில்நுட்ப மையமாக மாற்ற, விண்வெளி தொழில்நுட்ப கொள்கை 2025 - 2030 உதவும். புதிய ஸ்டார்ட் அப் கொள்கையின் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 25 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை நிறுவ, அரசு உதவும்.
வளரும் பெங்களூரு இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என்று பல ஆண்டுகளாக பெங்களூரு அழைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்று இன்னும் பெரிதாக வளர்ந்து, புதுமை, திறமை, ஆராய்ச்சி, தொழில்நுட்பத்துக்கு உலகளவில் முதன்மையாக நிற்கிறது.
கர்நாடகாவில் 85 பல்கலைக்கழகங்கள், 243 பொறியியல் கல்லுாரிகள், 1,800 ஐ.டி.ஐ.,க்கள் உள்ளன. மாநிலத்தில் வேலையின்மை விகிதம், 4.3 சதவீதம் மட்டுமே.
தொழில் முனைவோருக்கு பெங்களூரு ஆற்றலின் மையமாக உள்ளது. 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தாயகமாக கர்நாடகா உள்ளது. நாட்டின் மொத்த ஸ்டார்ட் அப் நிதியில், 47 சதவீதம் கர்நாடகா பங்களிக்கிறது என்பதில் பெருமை அடைகிறேன்.
'குவாண்டம்' தொழில்நுட்பத்துக்கான வழிகாட்டுதல்களை செயல்படுத்திய முதல் மாநிலம் கர்நாடகா தான். மாநில அரசின் தெளிவான கொள்கை, எளிதான அனுமதி, திறன்கள், உள்கட்டமைப்பு, ஆதரவான சூழல் ஆகியவையே, கர்நாடகாவை நாட்டின் மிகவும் நம்பகமான முதலீடு செய்யும் இடமாக மாற்றி உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
JPM_18 11 2025 (4), JPM_18 11 2025 (5), JPM_18 11 2025 (6), JPM_18 11 2025 (7)
பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டை துவக்கிவைத்து முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் பார்வையிட்டனர். (3வது படம்) கர்நாடகா தயாரிக்கும் ஏ.ஐ., மடிக்கணினி பெட்டி அறிமுகம். (கடைசி படம்) மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டு பிரதிநிதிகள்.

