/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகாவில் மின்சார வாகனங்களுக்காக 1,500 சார்ஜிங் மையங்கள் அமைக்க திட்டம்
/
கர்நாடகாவில் மின்சார வாகனங்களுக்காக 1,500 சார்ஜிங் மையங்கள் அமைக்க திட்டம்
கர்நாடகாவில் மின்சார வாகனங்களுக்காக 1,500 சார்ஜிங் மையங்கள் அமைக்க திட்டம்
கர்நாடகாவில் மின்சார வாகனங்களுக்காக 1,500 சார்ஜிங் மையங்கள் அமைக்க திட்டம்
ADDED : அக் 18, 2025 11:06 PM

பெங்களூரு: கர்நாடகாவில் மின்சார வாகனங்களுக்கென கூடுதலாக 1,500 சார்ஜிங் மையங்களை அமைக்க, பி.எம்.இ - டிரைவ் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கும்படி, மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்க பெஸ்காம் தயாராகி வருகிறது.
இதுகுறித்து, பெஸ்காம் எனும் பெங்களூரு மின் வினியோக நிறுவன நிர்வாக இயக்குநர் சிவசங்கர் கூறியதாவது:
கர்நாடகாவில் மின்சார வாகனங்களுக்கென 5,960 சார்ஜிங் மையங்கள் உள்ளன. மேலும் 1,500 மையங்களை அமைக்க, பி.எம்.இ - டிரைவ் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கும்படி, மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்படும்.
மத்திய அரசின் அனுமதிக்கு பின், சார்ஜிங் மையங்கள் அமைக்க டெண்டர் அழைக்கப்படும்.
பல்வேறு எரிபொருள் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில், 350க்கும் மேற்பட்ட சார்ஜிங் மையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பெஸ்காம் நிர்வகித்து வரும் 209 சார்ஜிங் மையங்களை தரம் உயர்த்த திட்டம் வகுத்தது. இவற்றில் 184 மையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
விரைவில் சார்ஜ் பஸ், டிரக் உட்பட கனரக வாகனங்களை சார்ஜிங் செய்ய, 240 கே.வி., திறன் கொண்ட சார்ஜிங் பாயின்ட்; கார், இரு சக்கர வாகனங்களுக்கு சார்ஜிங் செய்ய 120 கே.வி., திறன் கொண்ட பாயின்ட்கள் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விரைவில் சார்ஜ் ஆகும்.
மத்திய அரசின், 'பி.எம்., சூர்யகர்' திட்டத்தின் கீழ், மாநிலத்தில் ஒரு லட்சம் வீடுகளின் கூரையில் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். பெஸ்காம் எல்லையில் 30,000 வீடுகளின் கூரையில் சோலார் பலகைகள் பொருத்தப்படும். இதற்காக மத்திய அரசு 30,000 முதல் 78,000 ரூபாய் வரை, மானியம் வழங்கும். இத்திட்டத்தை பொது மக்கள் பயன்படுத்த வேண்டும்.
மத்திய அரசின் திட்டத்தின் கீழ், 3,900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். 389 துணை மையங்களின் 2,400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய டெண்டர் அழைத்துள்ளோம். 1,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்திக்கு, டெண்டர் அழைக்க வேண்டும்.
35 இடங்கள் பெஸ்காம் எல்லையில் 50 இடங்களில், நடப்பாண்டு டிசம்பருக்குள் 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, 4 ஏக்கர் நிலம் தேவைப்படும். தனியார் நிலம் வாடகைக்கு பெறப்படும். ஏக்கருக்கு 25,000 ரூபாய் வாடகை செலுத்தப்படும். திட்டத்துக்காக ஏற்கனவே 35 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தற்போதைக்கு தனியார் இடங்கள் கிடைக்கவில்லை. எனவே இருப்புள்ள அரசு நிலம், ஏரி வளாகத்தின் காலியிடங்களை பயன்படுத்தி, சோலார் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். 15 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு ரூரல் மாவட்டத்தின், சூலிபெலே ஏரி இடத்தில் ஐந்து மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
மாநிலத்தில் 40,000 விவசாயிகளின் ஆழ்துளை கிணற்றுக்கு, சோலார் பம்ப்செட்கள் பொருத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். பெஸ்காம் எல்லையில் 1,110 பேர் சோலார் பம்ப்செட்கள் பொருத்தியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

