/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹிமாச்சல பிரதேசத்துக்கு கர்நாடகா ரூ.5 கோடி நிதி
/
ஹிமாச்சல பிரதேசத்துக்கு கர்நாடகா ரூ.5 கோடி நிதி
ADDED : செப் 15, 2025 06:03 AM
பெங்களூரு : வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ள, ஹிமாச்சல பிரதேச மாநிலத்துக்கு, கர்நாடக அரசு உதவிக்கரம் நீட்டுகிறது.
இது குறித்து, அம்மாநில முதல்வர் சுகவிந்தர் சிங்குக்கு, முதல்வர் சித்தராமையா எழுதிய கடிதம்:
சமீபத்தில் ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பலர் பலியாகினர். பெருமளவில் சொத்துகள் சேதமடைந்தன. இத்தகைய நெருக்கடியான நேரத்தில், கர்நாடக மக்கள் ஹிமாச்சல பிரதேச மக்களுக்கு ஆதரவாக நிற்பர்.
இதற்கு அடையாளமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. 5 கோடி ரூபாய் நிதி வங்கப்படும்.
இயற்கை சீற்றங்கள் நடக்கும் போது, மாநிலங்கள் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும். எனவே ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பால் அவதிப்படும் மக்களுக்கு, கர்நாடக காங்., அரசு தோள் கொடுத்து துணை நிற்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.