/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கெம்பே கவுடா விமான நிலையத்துக்கு சர்வதேச அங்கீகாரம்
/
கெம்பே கவுடா விமான நிலையத்துக்கு சர்வதேச அங்கீகாரம்
கெம்பே கவுடா விமான நிலையத்துக்கு சர்வதேச அங்கீகாரம்
கெம்பே கவுடா விமான நிலையத்துக்கு சர்வதேச அங்கீகாரம்
ADDED : ஆக 30, 2025 03:26 AM
பெங்களூரு: பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ளது கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம். இங்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கிலான பயணியர் வந்து செல்கின்றனர்.
இங்கு முதியோர், மாற்றுத்திறனாளி பயணியர் எளிதில் செல்வது, கழிப்பறை வசதி என அனைத்து அடிப்படை வசதிகளும் நவீன முறையில் செய்யப்பட்டு உள்ளன.
இதற்காக, விமான நிலைய அணுகல் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு ஏ.சி.ஐ., 2ம் நிலை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் ஏ.சி.ஐ., இரண்டாம் நிலை வழங்கப்பட்ட முதல் விமான நிலையமாக கெம்பே கவுடா விமான நிலையம் மாறி உள்ளது.
இதுகுறித்து கெம்பே கவுடா விமான நிலைய தலைமை நிர்வாக அதிகாரி சத்யகி ரகுநாத் கூறியதாவது:
ஒவ்வொரு பயணியரின் பயணத்தை பாதுகாப்பாகவும், மறக்க முடியாததாகவும் கெம்பே கவுடா விமான நிலையம் மாற்றி உள்ளது. இதற்கு, அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரின் உழைப்பே காரணம்.
ஏ.சி.ஐ., லெவல் 2 அங்கீகாரம் வழங்கியது பெருமையாக உள்ளது. மேலும் பல சாதனைகளை படைக்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.