/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., பிரவீன் நெட்டார் கொலை முக்கிய நபர் கேரளாவில் கைது
/
பா.ஜ., பிரவீன் நெட்டார் கொலை முக்கிய நபர் கேரளாவில் கைது
பா.ஜ., பிரவீன் நெட்டார் கொலை முக்கிய நபர் கேரளாவில் கைது
பா.ஜ., பிரவீன் நெட்டார் கொலை முக்கிய நபர் கேரளாவில் கைது
ADDED : ஜூலை 04, 2025 11:16 PM
தட்சிண கன்னடா மாவட்ட பா.ஜ., இளைஞர் அணி தலைவர் பிரவீன் நெட்டார் கொலையில், மூன்று ஆண்டுகளுக்கு பின், முக்கிய குற்றவாளியை கேரளாவில் என்.ஐ.ஏ., கைது செய்துள்ளது.
தட்சிண கன்னடா மாவட்ட பா.ஜ., இளைஞர் அணி தலைவராக இருந்தவர் பிரவீன் நெட்டார், 27. இவரது சொந்த ஊர் சுள்ளியா தாலுகாவின் பெல்லாரே கிராமம். 2022ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி இரவு பிரவீன் நெட்டார் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை விவகாரத்தில், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., அமைப்பினருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததால், வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்கிறது.
இந்த வழக்கில் ஏற்கனவே 27 பேரை என்.ஐ.ஏ., கைது செய்திருந்தது. முக்கிய குற்றவாளியான அப்துல் ரகுமான் உட்பட நான்கு பேர் தலைமறைவாகினர். அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றது தெரிந்தது.
நான்கு பேரையும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த என்.ஐ.ஏ., அவர்களை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு, நான்கு லட்சம் ரூபாய் சன்மானமும் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கத்தாரில் இருந்த அப்துல் ரகுமான், அங்கிருந்து விமானம் மூலம், கேரளாவின் கண்ணுார் விமான நிலையத்திற்கு வருவதாக, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. விமான நிலையம் சென்ற என்.ஐ.ஏ., அதிகாரிகள், விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்த, அப்துல் ரகுமானை கைது செய்தனர்.
இதன்மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது. தலைமறைவாக இருந்த அப்துல் ரகுமான் 3 ஆண்டுகளுக்கு பின், சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது
- நமது நிருபர் -.