/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாலையை மீட்டெடுப்பதே எங்கள் நிகழ்ச்சி நிரல் சிவகுமாருக்கு கிரண் மஜும்தார் ஷா பதிலடி
/
சாலையை மீட்டெடுப்பதே எங்கள் நிகழ்ச்சி நிரல் சிவகுமாருக்கு கிரண் மஜும்தார் ஷா பதிலடி
சாலையை மீட்டெடுப்பதே எங்கள் நிகழ்ச்சி நிரல் சிவகுமாருக்கு கிரண் மஜும்தார் ஷா பதிலடி
சாலையை மீட்டெடுப்பதே எங்கள் நிகழ்ச்சி நிரல் சிவகுமாருக்கு கிரண் மஜும்தார் ஷா பதிலடி
ADDED : அக் 20, 2025 06:53 AM

பெங்களூரு: பெங்களூரு நகரின் சாலையை மீட்டெடுப்பது எங்கள் நிகழ்ச்சி நிரல் என, துணை முதல்வர் சிவகுமாருக்கு, கிரண் மஜும்தார் ஷா பதிலடி கொடுத்து உள்ளார்.
பெங்களூரு நகரின் மோசமான சாலைகள் குறித்து, பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார் ஷா எக்ஸ் வலைதளத்தில் விமர்சனம் செய்தார். இது தேசிய அளவில் எதிரொலித்தது.
இதுகுறித்து துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''சாலை பள்ளங்கள் குறித்து விமர்சிக்கும், கிரண் மஜும்தார் ஷா உள்ளிட்டோரிடம், சில தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் உள்ளது.
''இதனால் அவர்கள் விமர்சனம் செய்கின்றனர். பா.ஜ., ஆட்சியின் போது, அவர்கள் ஏன் வாய் திறக்கவில்லை,'' என்றார்.
இதற்கு பதிலடி கொடுத்து, கிரண் மஜும்தார் ஷா தனது எக்ஸ் பதிவில், 'சிவகுமார் கூறியது உண்மை இல்லை. நானும், மோகன் தாஸ் பையும், பெங்களூரில் சீரழிந்து வரும் உள்கட்டமைப்பை, முந்தைய பா.ஜ., மற்றும் ம.ஜ.த., ஆட்சியிலும் விமர்சனம் செய்து உள்ளோம்.
எங்களுக்கு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இல்லை. பெங்களூரு சாலைகளை மீட்டெடுப்பது எங்கள் நிகழ்ச்சி நிரல்' என கூறி உள்ளார்.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ''கிரண் மஜும்தார் ஷா, உலகளவில் செல்வாக்கு பெற்ற தொழில் அதிபர். அவர் ஏதாவது பதிவிட்டால் அது உலகளவில் எதிரொலிக்கும்.
''அவர்களுக்கு ஏதாவது பிரச்னை இருந்தால் முதல்வர், துணை முதல்வரை சந்தித்து கூறலாம். அதைவிட்டு ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் பேசுவது சரியல்ல. அவரது கருத்தால் என்னென்ன பின்விளைவுகளை ஏற்படும் என்பதையும் யோசிக்க வேண்டும்,'' என்றார்.