/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கீர்த்தி நாராயணா கோவில்
/
விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கீர்த்தி நாராயணா கோவில்
விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கீர்த்தி நாராயணா கோவில்
விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கீர்த்தி நாராயணா கோவில்
ADDED : டிச 09, 2025 06:23 AM

கர்நாடகாவின் வரலாற்று சிறப்புமிக்க நகரமான குடகின் தலக்காட்டில் ஏராளமான கோவில்கள் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்க வகையில் இருப்பது கீர்த்தி நாராயணா கோவில். தனித்துவமான ஹொய்சாளா கட்டட கலையில் கட்டப்பட்ட இந்த கோவில் கருவறையில், 9 அடி உயரத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட விஷ்ணு சிலை உள்ளது.
பத்தாம் நுாற்றாண்டில் ஸ்ரீராமானுஜாச்சாரியால் கோவில் நிறுவப்பட்டது. 12ம் நுாற்றாண்டில் சோழர்களை வென்றதன் நினைவாக, மன்னர் விஷ்ணுவர்த்தனால் ஹொய்சாளா பாணியில் கட்டப்பட்டு உள்ளது.
இடைவிடாமல் பெய்த மழை, மண் சரிவால் மண்ணில் புதையுண்டு இருந்த இக்கோவில் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் பாதுகாக்கப்படுகிறது.
ஆனாலும் கோவிலின் சில பகுதிகள், இன்றும் மண்ணில் மூடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
விஷ்ணு சிலை பெரும்பாலும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையால் அலங்கரிக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி, ரத உற்சவம் கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளான உள்ளன.
கோவிலின் நடை தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.
பாதி மணல் மூடிய கோவிலை துாரத்தில் இருந்து பார்ப்பது புதிய அனுபவமாக இருக்கும்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து தலக்காடு 129 கி.மீ., துாரத்தில் உள்ளது. சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து தலக்காடு, மடிகேரிக்கு அடிக்கடி அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயிலில் செல்வோர் மைசூரு சென்று அங்கிருந்து தலக்காட்டிற்கு பஸ்சில் செல்லலாம்.
- நமது நிருபர் -

