தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/செய்வினை கோளாறு தீர்க்கும் கொடகுர்கி கத்தி மாரம்மா கோவில்

செய்வினை கோளாறு தீர்க்கும் கொடகுர்கி கத்தி மாரம்மா கோவில்

செய்வினை கோளாறு தீர்க்கும் கொடகுர்கி கத்தி மாரம்மா கோவில்


UPDATED : நவ 24, 2026 12:00 AM

ADDED : நவ 23, 2026 07:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 12:00 AM ADDED : நவ 23, 2026 07:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –

பெங்களூரு ரூரல் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகா கொடகுர்கி கிராமத்தில், ஸ்ரீ கத்தி மாரம்மா கோவில் உள்ளது. இக்கோவில் கருவறையில் கத்தியை ஏந்திய மாரம்மா மஹேஸ்வரி வடிவமாக, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாரம்மாவை எல்லையை பாதுகாக்கும் தேவியாக பாவித்து, கிராம மக்கள் வழிபடுகின்றனர்.

பொதுவாக அம்மன் கோவில்கள் அம்மன் சிலைகள் கைகளில் உடுக்கை, அங்குசம், திரிசூலம் ஏந்தியிருப்பது வழக்கம். ஆனால் இங்கு அன்னை தனது திருக்கரத்தில் பிரமாண்ட கத்தியை தாங்கி நிற்கிறார். இக்கத்தி வெறும் ஆயுதம் இல்லை. பக்தர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை வெட்டி வீழ்த்தும் ஞானத்தின் குறியீடு என நம்பப்படுகிறது.

மாரம்மாவின் கண்கள் மிகவும் கூர்மையாகவும், பக்தர்கள் மனதில் பயபக்தியை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. செய்வினை கோளாறுகள், கண் திருஷ்டி, தீராத உடல்நல குறைபாடுகள், குடும்ப பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர் இக்கோவிலுக்கு வந்து அன்னையின் பாதத்தில் விளக்கேற்றி வேண்டி கொண்டால், பிரச்னைகள் சில நாட்களில் தீர்ந்து விடும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.

வாரத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மாரம்மாவுக்கு சிறப்பு பூஜைகள், லலித சஹஸ்கரநாம அர்ச்சனைகள் செய்யப்படுகின்றன. ஆடி மாதத்தில் கோவில் திருவிழா நடக்கும்.

கிராமத்து பெண்கள் பாரம்பரிய முறைப்படி வேப்பிலை ஆடை உடுத்தியும், தலையில் கரகம் ஏந்தியும், கூழ் காய்ச்சி அம்மனுக்கு படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்த கோவில் வெறும் வழிபாட்டு தலமாக மட்டுமின்றி, சமூக ஒற்றுமைக்கான மையமாகவும் உள்ளது. ஜாதி, மதம் பேதமின்றி கோவிலுக்கு அனைத்து தரப்பு மக்களும் வந்து அம்மனை தரிசிக்கின்றனர்.

திங்கள் முதல் வியாழன் வரை காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும்; வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us