/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்., அரசை கண்டித்து கோலார் பா.ஜ., தர்ணா
/
காங்., அரசை கண்டித்து கோலார் பா.ஜ., தர்ணா
ADDED : ஆக 12, 2025 08:35 AM

கோலார் : எஸ்.சி., - எஸ்.டி., நிதியை தவறாக பயன்படுத்திய கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து, கோலார் மாவட்ட பா.ஜ.,வினர் நேற்று தர்ணா செய்தனர்.
கோலார் மாவட்ட பா.ஜ., தலைவர் ஓம்சக்தி சலபதி தலைமையில், கோலார் முன்னாள் எம்.பி., முனிசாமி, தங்கவயல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., சம்பங்கி உட்பட பலர் ஊர்வலமாக சென்றனர். கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா செய்தனர். தங்களின் கோரிக்கை மனுவை கலெக்டர் எம்.ஆர்.ரவியிடம் அளித்தனர்.
முனிசாமி அளித்த பேட்டி:
கர்நாடகாவில் நடப்பது ஊழல் ஆட்சி. இது, தலித் விரோத ஆட்சியாகும். எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட 50,000 கோடி ரூபாய் நிதியை வாக்குறுதி திட்டங்களுக்காக பயன்படுத்தி உள்ளனர்.
இத்தொகையை திருப்பிக் கொடுக்கத் தவறினால் முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடரப்படும். இதை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.சி., பிரிவு தலைவர் கபாலி சங்கர், எஸ்.டி., பிரிவு தலைவர் திம்மராயப்பா, முன்னாள் மாவட்ட தலைவர் வேணுகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.