தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சட்டவிரோத குவாரிகளை தடுக்க கோலார் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

சட்டவிரோத குவாரிகளை தடுக்க கோலார் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

சட்டவிரோத குவாரிகளை தடுக்க கோலார் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை


UPDATED : அக் 22, 2026 12:00 AM

ADDED : அக் 21, 2026 11:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 12:00 AM ADDED : அக் 21, 2026 11:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோலார்: கோலார் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த கொலை, சந்தேகத்திற்கிடமான இறப்புகள், லாரி விபத்துகளை கருதி, சட்டவிரோத கல்குவாரிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கோலார் மாவட்டத்தில் சமீப நாட்களாக கல்குவாரி தொழில் நடத்துவது அதிகரிக்கிறது. முறைப்படி அனுமதி பெற்று நடக்கும் கல்குவாரிகளை விட சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளே அதிகம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத்தகைய கல்குவாரிகளால் அசம்பாவிதங்கள் நடக்கின்றன.

கோலார் மாவட்டம், மாலுார் தாலுகாவின் தேவரஹள்ளி கிராமத்தில் அக்டோபர் 1ம் தேதியன்று சட்டவிரோத சுரங்க தொழில் காரணமாக, முரளி என்பவர் கொலை செய்யப்பட்டார்.

அக்டோபர் 10ல், வேமகல் அருகில் பெட்டஹொசபுரா கிராமத்தின் கல்குவாரி ஒன்றில் லட்சுமண் என்பவர் சந்தேகத்திற்கிடமாக இறந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன் இதே குவாரியில், நடந்த லாரி விபத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சுபேத் பானர்ஜி இறந்தார்.

கோலார் நகரின் கே.பி,.ஹொசஹள்ளியில் நடந்த மற்றொரு லாரி விபத்தில் ரவி என்பவர் உயிரிழந்தார். மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளின் அரசு நிலத்தில், சட்டவிரோதமாக சுரங்க தொழில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, மாலுார் எம்.எல்.ஏ., நஞ்சேகவுடா, ம.ஜ.த., பிரமுகர் ஹூடி விஜய்குமார் உட்பட பலரும் சட்டவிரோத சுரங்கத்தொழிலை கட்டுப்படுத்தும்படி, மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினர். இதன்படி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கோலார் மாவட்ட கலெக்டர் ரவிகுமார் கூறியதாவது:

கல்குவாரிகளில் தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடப்பதால் சட்டவிரோத கல்குவாரிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இத்தகைய கல்குவாரிகளை அடையாளம் கண்டு அப்போதே அவற்றை மூட முடிவு செய்துள்ளோம்.

கோலார் மாவட்டம் முழுதும், அடுத்த 15 நாட்களில் செக்போஸ்டுகள் அமைக்கப்படும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த செக்போஸ்டுகளில் சுரங்கம் மற்றும் நில ஆய்வியல் துறை, வருவாய் துறை, போலீஸ் துறை, கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் நியமிக்கப்படுவர்.

இ வர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கற்களுடன் செல்லும் லாரிகளை கண்காணித்து சோதனையிடுவர். வரி செலுத்தப்பட்டுள்ளதா, கற்கள் எந்த குவாரியில் இருந்து வந்தது, லாரி எங்கு செல்கிறது என்ற தகவல் சேகரிக்கப்படும்.

சட்டவிரோதமாக கொண்டு செல்வது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us