தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சட்டசபை விவகார அமைச்சராக கிருஷ்ணபைரே கவுடா நியமனம்

 சட்டசபை விவகார அமைச்சராக கிருஷ்ணபைரே கவுடா நியமனம்

 சட்டசபை விவகார அமைச்சராக கிருஷ்ணபைரே கவுடா நியமனம்


ADDED : ஆக 19, 2026 03:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 03:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: சட்டசபை விவகார துறை அமைச்சராக, கிருஷ்ணபைரே கவுடா நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக அரசின் சாதனைகள், சட்டசபை நடக்கும் போது எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து சட்டசபையை சுமூகமாக நடத்துவது, அமைச்சரவை முடிவை வெளியே கூறுவது உள்ளிட்ட பொறுப்புகளை இதுவரை சட்டம், சட்டசபை விவகார துறை அமைச்சர் கவனித்து வந்தார். இரண்டும் ஒரே துறையாக இருந்தது.

இந்நிலையில் சட்டம், சட்டசபை விவகாரங்கள் துறை இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. சட்ட துறை முதல்வர் சிவகுமார் தன் வசம் தக்க வைத்துள்ளார். சட்டசபை விவகாரங்கள் துறை அமைச்சராக கிருஷ்ணபைரே கவுடாவை நியமித்துள்ளார். இதற்கான உத்தரவை, கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று பிறப்பித்தார்.

கிருஷ்ணபைரே கவுடாவிடம் மிகவும் பலம் வாய்ந்த, பெங்களூரு நகர வளர்ச்சி துறையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us