ADDED : ஆக 04, 2026 07:59 PM

துமகூரு: அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள, குப்பி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ், கே.எஸ்.ஆர்.டி.சி., தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
துமகூரில் அவர் அளித்த பேட்டி:
ம.ஜ.த.,வில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தான், காங்கிரசுக்கு வந்தேன். இங்கும் எனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதற்காக பா.ஜ.,வுக்கு செல்ல வேண்டுமா?
அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் இருந்தேன். நான் அமைச்சராக வேண்டும் என்று, எனது தொகுதி மக்கள் கூறுகின்றனர். ஆனால் அதை சொல்ல வேண்டியவர்கள் இன்னும் சொல்லவில்லை.
என்னை போல சாதாரண விவசாயி மகன் அரசியலில் உச்சத்திற்கு வருவது கடினம். தற்போது கே.எஸ்.ஆர்.டி.சி., இயங்குகிறது. இங்கு எதையும் சாதிக்க முடியாது என்று தெரிந்து விட்டது. இதனால் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
