தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மனித - வனவிலங்கு மோதல் தடுக்க குமாரசாமி நடவடிக்கை

 மனித - வனவிலங்கு மோதல் தடுக்க குமாரசாமி நடவடிக்கை

 மனித - வனவிலங்கு மோதல் தடுக்க குமாரசாமி நடவடிக்கை


ADDED : பிப் 05, 2026 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 06:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்நாடகாவில் மனித - வனவிலங்கு மோதலை முற்றிலும் தடுப்பது தொடர்பாக, மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவுடன், கர்நாடகாவை சேர்ந்த மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவை, பார்லிமென்ட்டில் உள்ள அவரது அலுவலகத்தில், கர்நாடகாவை சேர்ந்த மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி நேற்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, கர்நாடகாவில் தினமும் அதிகரித்து வரும் மனித - வனவிலங்கு மோதல் தொடர்பாகவும், இதனால் ஏற்படும் மனிதர்கள் உயிரிழப்பு பற்றியும் குமாரசாமி விபரமாக எடுத்து கூறினார்.

சிக்கமகளூரு, குடகு, ஹாசன், மைசூரு, சாம்ராஜ்நகர், ராம்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில், காட்டு யானைகள் தாக்கி விவசாயிகள் அதிகம் உயிரிழப்பது பற்றியும், பூபேந்திர யாதவ் கவனத்திற்கு குமாரசாமி கொண்டு சென்றார். மனித - வனவிலங்கு மோதலை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த பூபேந்திர யாதவ், இந்த விஷயத்தில் உடனடியாக அவசர கவனம் செலுத்துவதாக கூறி, குமாரசாமியிடம் இருந்து தகவல்களை பெற்று கொண்டார். கர்நாடகாவில் வனவிலங்குகள் தாக்கி இறந்தவர்கள் குறித்த விபரத்தை, பார்லிமென்ட் கூட்டத்தொடர் முடிவதற்குள் வழங்கும்படியும், தன் துறை அதிகாரிகளுக்கு, பூபேந்திர யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us