தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பால் கொள்முதல் விலை ரூ.10 உயர்த்த மாநில அரசுக்கு குமாரசாமி கோரிக்கை

 பால் கொள்முதல் விலை ரூ.10 உயர்த்த மாநில அரசுக்கு குமாரசாமி கோரிக்கை

 பால் கொள்முதல் விலை ரூ.10 உயர்த்த மாநில அரசுக்கு குமாரசாமி கோரிக்கை


ADDED : செப் 27, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 11:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''மாநில அரசு, ஆறாவது வாக்குறுதியாக, பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி தர வேண்டும்,'' என மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மாநில அரசு, ஆறாவது வாக்குறுதியாக, பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி தர வேண்டும். அதேவேளையில், நுகர்வோருக்கு சுமையாக இருக்க கூடாது. விவசாயிகளுக்கும் தற்போது நீங்கள் ஊக்கத்தொகையாக 5 ரூபாய் வழங்குவதை, 10 முதல் 15 ரூபாயாக உயர்த்துங்கள்.

நீங்கள் காபி, டீ, தின்பண்டங்களுக்காக 200 கோடி ரூபாய் செலவிடுகிறீர்கள். உங்களுக்கு அவ்வளவு அதிகாரத்தை, மாநில மக்கள் தானே கொடுத்தனர். அதை மக்களுக்கு திருப்பி கொடுப்பதில் என்ன பிரச்னை. கிரஹலட்சுமி திட்டத்துக்கு பெண்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் தாராளாக கொடுக்கிறீர்களே. அதுபோன்று பால் உற்பத்தியாளர்களுக்கும் ஊக்கத்தொகையாக 10 ரூபாய் கொடுங்கள்.

நான் இரண்டு முறை முதல்வராக இருந்தபோதும், மத்திய அரசை அணுகவில்லை. அவர்கள், வறட்சி பாதித்த விவசாயிகளுக்கு 2,500 ரூபாய் மானியமாக கொடுத்தனர்.

இப்போது மத்திய அரசிடம் இழப்பீடு கேட்கிறீர்கள். என் ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு தலா 28,000 ரூபாய் இழப்பீடு கொடுத்திருந்தேன். நான் ஏற்கனவே கரும்பு விவசாயிகளுக்கு 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை தள்ளுபடி செய்திருந்தேன்.

எனது 14 மாத முதல்வர் பதவி காலத்தில், நிதி நிறுவனங்களின் அச்சுறுத்தலை தவிர்ப்பதற்காக, கடன்களை தள்ளுபடி செய்தேன். நான் பதவியை விட்டு விலகியதும், என்ன நடந்தது என்பதை உங்களுக்கு சொல்ல தேவையில்லை.

விவசாயிகள் கடன் வாங்கி விதைத்திருக்கின்றனர். நீங்கள் கொடுக்கும் 2,500 ரூபாயை வைத்து, அவர்கள் என்ன செய்வர்? விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளின் அளவு குறித்து, அறிவியல் பூர்வமான முடிவெடுத்து, இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us