/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பா.ஜ.,வை விட்டு விலகமாட்டேன்' கும்டா எம்.எல்.ஏ., உறுதி
/
'பா.ஜ.,வை விட்டு விலகமாட்டேன்' கும்டா எம்.எல்.ஏ., உறுதி
'பா.ஜ.,வை விட்டு விலகமாட்டேன்' கும்டா எம்.எல்.ஏ., உறுதி
'பா.ஜ.,வை விட்டு விலகமாட்டேன்' கும்டா எம்.எல்.ஏ., உறுதி
ADDED : பிப் 25, 2026 07:32 AM

உத்தர கன்னடா: ''என் தொகுதி மேம்பாட்டுக்கு குறைந்த நிதியே கிடைத்தாலும் கவலையில்லை. எக்காரணத்தை கொண்டும் பா.ஜ.,வை விட்டு விலக மாட்டேன்,'' என, கும்டா பா.ஜ., - எம்.எல்.ஏ., தினகர் ஷெட்டி கூறினார்.
உத்தர கன்னடா மாவட்டம், அங்கோலா தாலுகாவின் மஞ்சுகுனியில் நேற்று முன்தினம் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சியில், கும்டா பா.ஜ., - எம்.எல்.ஏ., தினகர் ஷெட்டிக்கு, காங்கிரசில் சேரும்படி முதல்வரும், துணை முதல்வரும் அழைப்பு விடுத்தனர்.
இதற்கு பதிலளித்து தினகர் ஷெட்டி அளித்த பேட்டி:
உத்தர கன்னடா மாவட்டத்தில், நான் ஒருவன் மட்டுமே பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக உள்ளேன். எனவே, காங்கிரசில் இணையும்படி முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்தார். மாவட்டத்தின் ஒரே பா.ஜ., எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும், என் தொகுதி மேம்பாட்டுக்கு குறைந்த நிதியே கிடைத்தாலும், எக்காரணத்தை கொண்டும் பா.ஜ.,வை விட்டு விலகமாட்டேன்.
எனக்கு கிடைத்த தகவலின்படி, காங்கிரசில், 50க்கு, 50 அதிகார மோதல் உள்ளது. நியாயப்படி சிவகுமார் தான் முதல்வராக வேண்டும். கட்சிக்குள் எழுந்த அரசியல் காரணமாக, அப்பதவியை இழந்து விட்டார்.
முதல்வர்கள் சொர்க்கத்தில் இருந்து குதிப்பவர்கள் அல்ல. என்னை போன்று சாதாரண எம்.எல்.ஏ.,க்கள் தான். முன்னர் குண்டுராவ் இளம் வயதிலேயே முதல்வரானார். நேரம் வரும் போது யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம்.
எம்.எல்.ஏ., சந்துரு லமானி லஞ்சம் வாங்கியது மன்னிக்க முடியாத தவறு. இது கட்சிக்கு பாதிப்பை ஏற்படு த்தி உள்ள து. இத்தகைய செயலை பா.ஜ. , ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது .
இவ்வாறு அவர் கூறினார்.

