தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/விவசாய பணிகள் நிறுத்தம் கூலி தொழிலாளர்கள் தவிப்பு

விவசாய பணிகள் நிறுத்தம் கூலி தொழிலாளர்கள் தவிப்பு

விவசாய பணிகள் நிறுத்தம் கூலி தொழிலாளர்கள் தவிப்பு


UPDATED : நவ 29, 2026 12:00 AM

ADDED : நவ 28, 2026 11:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 12:00 AM ADDED : நவ 28, 2026 11:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு: காட்டு யானைகளின் தொல்லையால், மூடிகெரேவில் விவசாய பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதன் விளைவாக தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். அன்றாட வருவாய்க்கு பணம் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்.

சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரே தாலுகா வின் பல்வேறு கிராமங்கள் காட்டு யானைகளின் தொல்லையால் பாதிக்கப்பட்டு உள்ளன. வயல்கள், தோட்டங்களை யானைகள் குறி வைப்பதால் கோனிபீடு, மாகோனஹள்ளி, நந்திபுரா கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட, 22 கிராமங்களில் முன்னெச்சரிக் கையாக விவசாய பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த கிராமங்களில் உள்ள காபி தோட்டங்களை, கூலி தொழிலாளிகள் நம்பியுள்ளனர். ஹெக்சல், லோகவள்ளி, பிளகுளா உட்பட, பல்வேறு கிராமங்களின் தொழிலாளிகள் காபி தோட்டங்களுக்கு பணிக்கு செல் வர். ஆனால் காட்டு யானைகளின் தொல்லையால், தோட்டங்களில் பணி நிறுத்தப்பட்டுள்ளது. வேலை கேட்டு தோட்ட உரிமையாளருக்கு போன் செய்தால், ‘வேலைக்கு வராதீர்கள்’ என, பதில் வருகிறது.

வேலை இல்லாமல் தொழிலாளர்கள், வீட்டில் அமர்ந்திருக்க வேண்டிய கட் டாயம் ஏற்பட்டுள்ளது. இவர்களை பணிக்கு அழைத்து செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கும், இப்போது வேலை இல்லை. வருவாய் இல்லாமல் வாழ்க்கைக்கு வழியின்றி பரிதவிக்கின்றனர்.

காபி தோட்டங்களில் விளைச்சல் செழிப்பாக வளர்ந்துள்ளன. அறுவடைக்கு தயாராக உள்ளது. அறுவடை துவங்கினால் கூலி தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். ஆனால் அறுவடை செய்ய காட்டு யானைகள் முட்டுக்கட்டை போடுகின்றன.

காட்டு யானைகள் தொல்லைக்கு தீர்வு காண் பது தொடர்பாக, வனத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us