தாமதமாக பணிக்கு வந்தோரை வாசலில் நிறுத்திய சி.இ.ஓ.,
தாமதமாக பணிக்கு வந்தோரை வாசலில் நிறுத்திய சி.இ.ஓ.,
ADDED : செப் 26, 2026 11:09 PM
பீதர்: சரியான நேரத்துக்கு அலுவலகம் வராத அதிகாரிகள், ஊழியர்களை மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி, வாசலில் நிறுத்தினார்.
பீதர் மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி எனும் சி.இ.ஓ., கித்தே மாதவ் விட்டல் ராவ், நேற்று காலை அலுவலகத்துக்கு திடீரென வந்து, ஆய்வு செய்தார். அலுவலகத்தில் பெரும்பாலான இருக்கைகள், காலியாக இருந்தன. 10:00 மணிக்கு மேலாகியும், அதிகாரிகள், ஊழியர்கள் பணிக்கு ஆஜராகவில்லை.
இதை பார்த்து அதிருப்தி அடைந்த தலைமை செயல் அதிகாரி, வாசலில் வந்து நின்று கொண்டு, தாமதமாக வந்த அதிகாரிகள், ஊழியர்களை வன்மையாக கண்டித்தார்.
'வருகை பதிவு செய்ய செயலியை பயன்படுத்துவது, கட்டாயமாக இருந்தும், ஏன் தாமதமாக வருகிறீர்கள். நீங்கள் பணி நிமித்தமாக வெளியே சென்றதை, செயலியில் குறிப்பிடாதது ஏன்' என, கேள்வி எழுப்பினார். அவர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்வதாக எச்சரித்தார்.
அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளே வராமல், சிறிது நேரம் கதவை பூட் டினார்.
