தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நீதிபதிகள் நியமனம் கோரி வக்கீல்கள் போராட்டம்

 நீதிபதிகள் நியமனம் கோரி வக்கீல்கள் போராட்டம்

 நீதிபதிகள் நியமனம் கோரி வக்கீல்கள் போராட்டம்


ADDED : ஜூலை 22, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2026 11:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: சி ட்டி சிவில் கோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதிகள் பதவிகளை நிரப்பக்கோரி கர்நாடக உயர் நீதிமன்ற வளாகம் முன் வக்கீல்கள் நேற்று போராட்டம் நடத்தி னர்.

பெங் களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் நீதிபதிகள் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி, பெங்களூரு அம்பேத்கர் வீதியிலுள்ள கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்திற்கு முன் நேற்று வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.

ஏ.ஏ.பி., எனும் பெங்களூரு வக்கீல் சங்க தலைவர் விவேக் சுப்பாரெட்டி பேசியதாவது:

பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் 25 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், வழக்குகளை விரைந்து நடத்த முடியவில்லை.

கர்நாடக உயர் நீதிமன்றம், சிட்டி சிவில் கோர்ட் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களில் உள்ள உட்கட்டமைப்பு பிரச்னைகள் குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபு பக்ருவுக்கு கடந்த ஏப்ரலில் கடிதம் எழுதியது. இப்பிரச்னைகள் குறித்து பலமுறை வலியுறுத்தப்பட்டது. இருப்பினும், எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

உயர் நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தில் ஒரு, 'லிப்ட்' மட்டுமே உள்ளது. ஒரே ஒரு லிப்ட்டில் அனைவராலும் செல்ல இயலாது. இதனால், வக்கீல்கள், வயதான மனுதாரர்கள் 7வது மாடி வரை படிக்கட்டுகளில் ஏறிச்செல்கின்றனர். இது, சிரமத்தை ஏற்படுத்துகிறது. சில நீதிபதிகள் வக்கீல்களை அவமதிக்கின்றனர். அனைத்து பிரச்னைகளுக்கும் விரைந்து தீர்வு காணப்பட வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us