/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குடிநீர் திட்ட போராட்டத்திற்கு வக்கீல்கள் ஆதரவு
/
குடிநீர் திட்ட போராட்டத்திற்கு வக்கீல்கள் ஆதரவு
ADDED : ஜன 18, 2026 05:42 AM

தங்கவயல்: பெங்களூரு ரூரல், கோலார், சிக்கப்பல்லாபூர் மாவட்டங்களில், நிரந்தர குடிநீர் திட்டத்தை அரசு அமல்படுத்தக்கோரி, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கோபாலகவுடா தலைமையில் நேற்று கோலாரில் மாநாடு நடத்தப்பட்டது.
இதற்கு ஆதரவு தெரிவித்து, கோலார் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா நீதிமன்றங்களின் வக்கீல்கள் சங்கத்தினரும், நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு, போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்
அத்துடன், தங்கவயல் வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் ராஜகோபால கவுடா தலைமையில், பொதுச்செயலர் ஆர். ஜோதிபாசு முன்னிலையில், தங்கவயல் தாசில்தார் பரத்திடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர். அப்போது சங்கத்தின் செயலர் ஜோதிபாசு பேசுகையில், ''கோலார், சிக்கபல்லாப்பூர், பெங்களூரு ரூரல் ஆகிய மூன்று மாவட்டங்களில், நிரந்தர குடிநீர் கேட்டு, 30 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
தலைவர் ராஜகோபால் கவுடா பேசுகையில், ''தங்கவயலுக்கும் கிருஷ்ணா நதி நீர் கிடைக்க வேண்டும். 1,500 அடி ஆழத்தில் இருந்து தான் போர்வெல் தண்ணீர் எடுக்கப்படுகிறது. அந்த சுத்திகரிக்கப்படாத நீரை பயன்படுத்துவதால், பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்,'' என்றார்.

