sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 முதல்வர் பதவி குறித்து தலைவர்கள் 'கப்சிப்'

/

 முதல்வர் பதவி குறித்து தலைவர்கள் 'கப்சிப்'

 முதல்வர் பதவி குறித்து தலைவர்கள் 'கப்சிப்'

 முதல்வர் பதவி குறித்து தலைவர்கள் 'கப்சிப்'


ADDED : டிச 01, 2025 05:01 AM

Google News

ADDED : டிச 01, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: முதல்வர் பதவி குறித்த அதிகார பகிர்வு விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடமும் உறுதியான முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறது என்று தெரிகிறது. விரைவில் முதல்வர், துணை முதல்வர் இருவரையும் டில்லிக்கு வரவழைத்து ஆலோசனை நடத்துவர் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தனி அணி கர்நாடக காங்கிரசில் நிலவி வரும் முதல்வர் பதவி குறித்த அதிகார பகிர்வு விவகாரத்தில் ஆட்சியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், துணை முதல்வர் சிவகுமார் பெங்களூரில் நேற்று கூறியதாவது:

முதல்வரும், நானும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம். மாநில மக்கள் எங்களிடமிருந்து அதிக எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். அதற்கேற்ப நாங்கள் செயல்பட வேண்டும். 2028 சட்டசபை தேர்தல் தான் எங்கள் அடுத்த இலக்கு. நான் ஒருபோதும் ஒரு தனி அணி அமைத்து செயல்பட்டவன் கிடையாது.

நான் டில்லிக்கு சென்றால், தனியாக செல்வேன். 8 - 10 எம்.எல்.ஏ.,க்களை என்னுடன் அழைத்து செல்வது பெரிய விஷயமல்ல. நான் தலைவராக இருப்பதால், அனைவரையும் ஒன்றாக அழைத்து செல்ல வேண்டும். அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் எங்கள் தலைவர்கள் தான். நான் யாரிடமும் பாரபட்சம் காட்ட மாட்டேன்.

முதுகில் குமாரசாமி முதல்வராக இருந்த போது, அவருக்கு விசுவாசமாக பணியாற்றியுள்ளேன். குமாரசாமி இதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், என் விசுவாசம், என் மனசாட்சி கடவுளுக்கு தெரியும். குமாரசாமியின் அரசை காப்பாற்ற, நான் கடைசி நாள் வரை எவ்வளவு முயற்சித்தேன் என்பது அவரது தந்தைக்கு கூட தெரியும். நான் ஒருபோதும் யாருடைய முதுகிலும் குத்த மாட்டேன். நான் நேருக்கு நேர் போராடுபவன்.

கட்சி மேலிட தலைவர்கள் உட்பட அனைவருடனும் விவாதித்துள்ளேன். அது பற்றி ஊடகங்கள் முன் வெளியிட மாட்டேன்.

பார்லிமென்ட் பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடப்பதால், டில்லியில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி, எம்.பி.,க்களுடன் ஆலோசனை நடத்த வேண்டி உள்ளது. நீர்ப்பாசனம், மக்காசோளம், கரும்பு பயிர்கள் குறித்து குரல் எழுப்புவது குறித்து அவர்களுடன் விவாதிக்க வேண்டும்.

பா.ஜ.,வினர் எங்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதாக கூறுவதை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

டில்லி கூட்டம் இதற்கிடையில், டில்லியில் நேற்று மாலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா வீட்டில், அக்கட்சியின் மத்திய குழு கூட்டம் நடந்தது. இரவு 8:30 மணி வரை கூட்டம் நீடித்தது. அப்போது, கர்நாடக அதிகார பகிர்வு குறித்து விவாதித்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெறும் பார்லிமென்ட் கூட்டத்தொடர் மட்டுமே பேசப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதன் மூலம், காங்கிரஸ் மேலிடமும் முதல்வர் விவகாரத்தில் உறுதியான முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறது என்று தெரிகிறது. விரைவில் முதல்வர், துணை முதல்வர் இருவரையும் டில்லிக்கு வரவழைத்து ஆலோசனை நடத்துவர் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.






      Dinamalar
      Follow us