sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து

/

பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து

பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து

பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து


UPDATED : பிப் 02, 2026 06:06 PM

ADDED : பிப் 02, 2026 04:58 AM

Google News

UPDATED : பிப் 02, 2026 06:06 PM ADDED : பிப் 02, 2026 04:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு புறக்கணிப்பு

மத்திய அரசு பட்ஜெட்டால் கர்நாடகாவுக்கு எந்த நன்மையும் இல்லை. பெங்களூருக்கு அதிவேக ரயில் கண்டிப்பாக வர போவதும் இல்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை நீக்கியவர்கள், இப்போது பட்ஜெட்டில் சில திட்டங்களுக்கு மகாத்மா காந்தி பெயரை சூட்டி உள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக எதுவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. பெங்களூரை உலகளாவிய நகரம் என்று, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இதனால் பட்ஜெட்டில் பெங்களூருக்கு பெரிய பங்களிப்பு கிடைக்கும் என்று நினைத்தோம். ஆனால் ஒன்றுமே இல்லை. இது தான் உலகளாவிய நகரத்திற்கு, மத்திய அரசு கொடுக்கும் முக்கியத்துவமா? - சிவகுமார், துணை முதல்வர்

வளர்ச்சி பாதை பட்ஜெட்
நாட்டு மக்கள் நலனுக்கான பட்ஜெட் வெளியாகி உள்ளது. பெண் குழந்தைகள் கல்விக்காக விடுதி நிறுவவும்; சந்தன மர சாகுபடி, தென்னை மர வளர்ச்சியை ஊக்குவிக்கவும் அரசு முன்வந்து உள்ளது. வரிச்சுமை இல்லாத பட்ஜெட் தாக்கலாகி உள்ளது. கர்நாடக பட்ஜெட்டில் அனைத்திற்கும் வரி விதித்தார் சித்தராமையா. மாநில அரசின் கருவூலம் காலியாக உள்ளது. அடுத்த பட்ஜெட்டில் வரிகள் மேலும் அதிகரிக்கப்படும். முழுக்க, முழுக்க மக்களுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ள, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டுக்கள். இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் பட்ஜெட்டை வரவேற்கிறோம். - அசோக், எதிர்க்கட்சி தலைவர், பா.ஜ.,


வளர்ந்த பாரதம்
தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ள, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துக்கள்.நாட்டின் அனைத்து துறைகளுக்கும் உதவும் வகையிலும்; நாட்டின் இறையாண்மையை நிலைநிறுத்தும் பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் 25 கோடி மக்கள் வறுமை கோட்டில் கீழ் இருந்து மேலே வந்து உள்ளனர். இந்தியாவை 2047க்குள் வளர்ந்த பாரதம் ஆக்க வேண்டும் என்ற, பிரதமர் மோடி கனவை பிரதிபலிக்கும் பட்ஜெட்டாக உள்ளது. உர உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள் இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டு உள்ளது. - எடியூரப்பா, முன்னாள் முதல்வர், பா.ஜ.,


விரைவுபடுத்தும் அடித்தளம்
மத்திய அரசு பட்ஜெட் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களையும்; தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி துறையை வலுப்படுத்தும் வகையிலும் உள்ளது. உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் வணிகத்தை எளிதாக்கி உள்ளது. இந்த பட்ஜெட் நாட்டின் உற்பத்தி சூழல் அமைப்பை வலுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கும். ஸ்டார்ட் - அப் நிறுவனங்கள், நாட்டின் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்கள் மீது கவனம் செலுத்தும் பட்ஜெட் தாக்கலாகி உள்ளது. கர்நாடகாவிற்கு பயன் அளிக்கும் அதிவேக ரயில் வழித்தட முன்மொழிவு வரவேற்கத்தக்கது. ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட் வளர்ந்த பாரதத்தை நோக்கிய, இந்தியாவின் பயணத்தை விரைவுபடுத்தும் அடித்தளமாக உள்ளது. - உமா ரெட்டி, தலைவர், கர்நாடக வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு.


பரந்த, விரிவான வளர்ச்சி
மத்திய அரசின் 16வது நிதி ஆணையம் 2026 - 2027ம் நிதி ஆண்டில் கர்நாடகாவுக்கு வரி பங்கீடாக 63,049 கோடி ரூபாய் பரிந்துரை செய்து உள்ளது. இனிமேலாவது மத்திய அரசை விமர்சிப்பதை, காங்கிரஸ் அரசில் அங்கம் வகிப்பவர்கள் நிறுத்த வேண்டும். பட்ஜெட்டில் கர்நாடகாவுக்கு தேவையானது கிடைத்து உள்ளது. சந்தன மரம், தென்னை பயிர்கள், கோகோ பயிர்களுக்கான சிறப்பு திட்டங்களால், மாநிலத்தின் பல மாவட்டங்கள் பயன் பெறும். இது வெறும் பட்ஜெட் இல்லை. தொலைநோக்கு பார்வை, வளர்ந்த இந்தியாவை அடிப்படையாக கொண்டது. பரந்த, விரிவான வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்ததற்காக, மத்திய அரசை வெகுவாக பாராட்டுகிறேன். - குமாரசாமி, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர்.







      Dinamalar
      Follow us