sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 மஹாதேஸ்வரா மலையில் சிறுத்தை நடமாட்டம் சுற்றுலா பயணியர் பீதி

/

 மஹாதேஸ்வரா மலையில் சிறுத்தை நடமாட்டம் சுற்றுலா பயணியர் பீதி

 மஹாதேஸ்வரா மலையில் சிறுத்தை நடமாட்டம் சுற்றுலா பயணியர் பீதி

 மஹாதேஸ்வரா மலையில் சிறுத்தை நடமாட்டம் சுற்றுலா பயணியர் பீதி


ADDED : பிப் 22, 2026 05:21 AM

Google News

ADDED : பிப் 22, 2026 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாம்ராஜ்நகர்: மலை மஹாதேஸ்வரா மலையில், மீண்டும் சிறுத்தை நடமாட்டம் தென்படுவதால், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் பீதி அடைந்துள்ளனர்.

சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவில் அமைந்துள்ளது மலை மஹாதேஸ்வரா மலை; பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாகும். சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் இயற்கையை ரசிக்க வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆனால், சமீப நாட்களாக மலை மஹாதேஸ்வரா மலையில் சிறுத்தை நடமாடுவதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். சிவராத்திரி திருவிழாவின் போது, சிறுவனை சிறுத்தை தாக்க முற்பட்டது. எனவே, பாதயாத்திரை செல்லும் பாதையில், வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு க்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். தற்போது பாதயாத்திரை செல்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஆனாலும், வாகனங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறையவில்லை. இவர்களை சிறுத்தை அச்சுறுத்துகிறது. நேற்று முன்தினம் இரவு, தாளுபெட்டாவில் இருந்து மலை மஹாதேஸ்வரா மலைக்கு செல்லும் வழியில், நான்காவது திருப்பத்தில் தடுப்புச்சுவர் மீது சிறுத்தை அமர்ந்திருந்தது. அந்த வழியாக பைக்கில் சென்றவர்கள், சிறுத்தையை தங்களின் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

இரவு நேரத்தில் பைக்கில் யாரும் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் குறித்து, வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் கூண்டு வைத்துள்ளனர். சுற்றுப்பகுதிகளிலும் சிறுத்தையை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us