UPDATED : நவ 14, 2026 12:00 AM
ADDED : நவ 13, 2026 07:27 PM

– நமது நிருபர் –
மதிய உணவாக சாதத்திற்கு காரசாரமாக ஏதாவது குழம்பு வைத்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா... அப் படியென்றால், கருணைக்கிழங்கு கிரேவி செய்து சாப்பிடலாம்.
செய்முறை:
முதலில் மிக்ஸி ஜாரில் தனியா, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், தேங்காய், தக்காளி சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின், கருணைக்கிழங்கை துண்டு, துண்டாக நறுக்கி பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி, அடுப்பை ஆன் செய்து, சிறிதளவு வேகவைத்து எடுத்து கொள்ளவும். பின், அதை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பின், அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், கரம் மசாலா துாள், மிளகாய் துாள், சிக்கன் மசாலா சேர்த்து வதக்கவும்.
பின், மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை மூடி வைத்து, வேக விடவும். பின், கருணைகிழங்கை சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்கு வதக்கி, கொத்தமல்லி இலை துாவி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான கருணைக்கிழங்கு கிரேவி தயார்.
சாதத்திற்கு மட்டுமின்றி இட்லி, தோசை, பூரி, சப்பாத்திக்கும் அருமையான காம்பினேஷனாக இருக்கும்.
