sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 'ஒரு சினிமாவுக்கு செலவழிப்பதில் உங்கள் வாசிப்பு பயணத்தை தொடங்கலாமே'

/

 'ஒரு சினிமாவுக்கு செலவழிப்பதில் உங்கள் வாசிப்பு பயணத்தை தொடங்கலாமே'

 'ஒரு சினிமாவுக்கு செலவழிப்பதில் உங்கள் வாசிப்பு பயணத்தை தொடங்கலாமே'

 'ஒரு சினிமாவுக்கு செலவழிப்பதில் உங்கள் வாசிப்பு பயணத்தை தொடங்கலாமே'


ADDED : டிச 13, 2025 06:57 AM

Google News

ADDED : டிச 13, 2025 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புத்தகங்களை படித்தால் அறிவு வளரும், மொழி ஆற்றல் மேம்படும், மன ஆரோக்கியம், மூளை செயல்பாடு அதிகரிக்கும், படைப்பாற்றல், கற்பனைத்திறன், தன்னம்பிக்கை ஆகியவை அதிகரிக்கும் என சொல்லிக் கொண்டே போகலாம். இருப்பினும், வாசிப்பு பழக்கம் இளம் தலைமுறையினரிடம் குறைவாகவே இருக்கிறது. இதற்காக, அவர்களை குறை சொல்ல வேண்டிய தேவையில்லை. பாட புத்தகங்களை பார்த்து சலிப்பு அடைந்தவர்களுக்கும், சிறுவயதிலிருந்தே மொபைல் போனை பார்த்து வளர்ந்தவர்களை குறை சொல்லி என்ன ஆகப் போகிறது.

அதற்காக, அவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை அறிமுகப்படுத்த வேண்டாம் என சொல்லவில்லை. ஒரு முறை நல்ல புத்தகத்தின் ருசியை அவர்கள் அறிந்துகொண்டாலே போதும், அவர்களும் வாசிப்பு உலகிற்குள் தங்களை அறியாமலே காலடி எடுத்து வைத்துவிடுவர். அப்படியே இவர்கள் வாசிக்க துவங்கிவிட்டாலும் நேரம் இல்லை, பணம் இல்லை என்பர்.

ஒரு நாளைக்கு 4 முதல் 5 மணி நேரம் மொபைல் போன் உபயோகிப்போருக்கு நேரம் இல்லையா என கேளுங்கள். வாயடைத்து போவர். அடுத்து பணம் இல்லை. மாதம் மூன்று சினிமாக்களுக்கு சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்வோரிடம், புத்தகம் வாங்கி படிக்க 150 ரூபாய் பணம் இல்லையா என கேளுங்கள். மீண்டும் வாயடைத்து போவர்.

இந்த கேள்வியை ஆசிரியர்களும், பெற்றோர்களும் தங்கள் குழந்தை, மாணவர்களை பார்த்து நிச்சயம் கேட்க வேண்டியவை. சரி. இதெல்லாம் ஓகே. '150 ரூபாய்க்கு கூட புத்தகம் விற்கிறாங்களா' என தங்களின் கேள்விக்கு விடையாக ஐந்து புத்தகங்களின் பட்டியல் இதோ. இந்த அனைத்து புத்தகங்களும் நமது தாமரை பிரதர்ஸ் மீடியா அரங்கில் கிடைக்கும். அனைத்தும் தாமரை மீடியாவின் வெளியீடுகளே.

1அன்றாட வாழ்வியல் கணிதம் பாகம் -2

ஆசிரியர்: இரா.சிவராமன்

விலை: ரூ.110

அன்றாட வாழ்வில் நம்மை அறியாமல் நாம் பயன்படுத்தும் கணிதம். வெப்ப நிலை, கடிகாரங்களின் கணித பண்புகள் என அனைத்தையும் எளிமையாக புரிந்து கொள்ளும்படி நுால் உள்ளது. இப்புத்தகம் கணித பாடத்தின் மீதான மாணவர்களின் எண்ணத்தை நிச்சயம் மாற்றும். கணிதம் பிடிக்காது என கூறும் மாணவர்களுக்கு பரிசாக வழங்க தகுதியான நுால்.

2 சக்சஸ் மந்த்ரா

ஆசிரியர்: தி.குலசேகர்

விலை: ரூ.120

பிரபல தொழில் அதிபர்கள், விஞ்ஞானிகளின் வெற்றி ரகசியத்தை போட்டு உடைக்கும் நுால். வெற்றி அடைவதற்கான வழிகளை எளிய நடையில் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும்படி உள்ளது. புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் வாங்கி படிக்கலாம். மாணவர்களும் வாங்கி படித்து ஊக்கம் பெறலாம்.

3. சம்பிரதாயங்களும், அறிவியலும்

ஆசிரியர்: செல்வி நடேசன்

விலை: ரூ.150

நமது அன்றாட வாழ்வில் பாரம்பரியமாக செய்யும் விஷயங்களுக்கு பின் உள்ள அறிவியலை ஆழமாக இந்நுால் பேசுகிறது. வீட்டு வாசலில் ஏன் முருங்கை மரம் வைக்க கூடாது? துறவிகள் காவி உடை அணிவது ஏன்? போன்ற கேள்விக்கான அறிவியல் விளக்கங்கள் நுாலில் கொடுக்கப்பட்டு உள்ளன.

4. டிடெக்டிவ் கூப்பர்

ஆசிரியர்: ஷோயப் அபெரோஸ்

விலை: ரூ.150

ஆங்கில மொழியில் எழுதப்பட்ட மர்ம நாவல். துப்பறியும் நிபுணர் எப்படியெல்லாம் சிந்திக்க வேண்டும். கிடைக்கும் சிறிய துப்பை எவ்வாறு பயன்படுத்தி கொள்ள வேண்டும். குற்றவாளியை பிடிப்பதற்கு கையாளப்பட வேண்டிய தந்திரங்கள் ஆகியவை புத்தகங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த நுாலின் ஆசிரியர், 10 வயது சிறுவன் என்பது மற்றொரு சிறப்பு.

5. பழைய சோறு

ஆசிரியர்: கோமல் அன்பரசன்

விலை: ரூ.130

இன்றைய தலைமுறையினர் விரும்பி சாப்பிடாத பழைய சோற்றின் நன்மைகள் குறித்து நுால் எடுத்துரைக்கிறது. பழைய சோற்றின் மீதான பார்வை நிச்சயம் மாறும். நுாலை படித்தவர் பழைய சோற்றை தேடி தேடி உண்ணத்தொடங்குவர் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

... பாக்ஸ் ...

* இந்த புத்தகங்களின் விலையிலிருந்து 10 சதவீதம் சலுகை உண்டு. உதாரணம், 110 ரூபாய் புத்தகத்தை 100 ரூபாய்க்கு வாங்கி கொள்ளலாம். (ஆண்டு சந்தாவில் இலவசமாக 1,000 ரூபாய்க்கு புத்தகம் வாங்குவோருக்கு சலுகை கிடையாது)

*ஆண்டு சந்தா தொடர்புக்கு 94821 06254, 98442 52106

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us