/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாற்று திறனாளி கொலை குற்றவாளிக்கு 'ஆயுள்'
/
மாற்று திறனாளி கொலை குற்றவாளிக்கு 'ஆயுள்'
ADDED : பிப் 13, 2025 05:11 AM
பெங்களூரு: மொபைல் போனுக்கு இலவசமாக ரீசார்ஜ் செய்யவில்லை என்பதால், மாற்றுத்திறனாளியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பெங்களூரின், மடிவாளாவில் முகமது நசிருதீன் என்பவர் மொபைல் போன் கடை நடத்தினார். இவர் மாற்றுத்திறனாளி. இவரது கடைக்கு அமான் உல்லா, 35. அவ்வப்போது வந்து மொபைல் போனுக்கு ரீசார்ஜ் செய்து கொள்வார்.
கடன் சொல்லி ரீசார்ஜ் செய்து செல்வார். இதே போன்று பலமுறை ரீசார்ஜ் செய்தும் பணம் தரவில்லை.
கடந்த 2016 மார்ச் 5ம் தேதி, இரவு 10:00 மணியளவில் மொபைல் கடைக்கு வந்த அமான் உல்லா, இலவசமாக ரீசார்ஜ் செய்யும்படி கேட்டார். இதற்கு முகமது நசிருதீன் மறுத்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. அப்போது கோபமடைந்த அமான் உல்லா, முகமது நசிருதீனை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
மடிவாளா போலீசார், அமான் உல்லாவை கைது செய்தனர். விசாரணையை முடித்து, 68வது சி.சி.எச்., நீதிமன்றத்தில், குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் இவரது குற்றம் நிரூபணமானதால், அமான் உல்லாவுக்கு ஆயுள் தண்டனை, 50,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ரஷ்மி நேற்று தீர்ப்பளித்தார்.