/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஈஸ்வரப்பா குடும்பம் மீது லோக் ஆயுக்தா வழக்கு
/
ஈஸ்வரப்பா குடும்பம் மீது லோக் ஆயுக்தா வழக்கு
ADDED : ஜூலை 04, 2025 05:19 AM

ஷிவமொக்கா: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, லோக் ஆயுக்தாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா குடும்பத்தினர், வருமானத்துக்கும் அதிகமான சொத்துகளை குவித்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தக் கோரியும், ஷிவமொக்காவை சேர்ந்த வினோத் என்பவர், ஷிவமொக்கா நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி, லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட்டது.
இதன்படி ஈஸ்வரப்பா, அவரது மகன் காந்தேஷ், மருமகள் ஷாலினி ஆகியோர் மீது, நேற்று லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இன்று காலை விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளனர். ஆனால் ஈஸ்வரப்பா குடும்பத்தினர், தற்போது கேரளாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அவர்கள் ஷிவமொக்காவுக்கு திரும்பிய பின், விசாரணைக்கு ஆஜராகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.