தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/தங்கவயல் நகராட்சியில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் 6 மணி நேரம் சோதனை

தங்கவயல் நகராட்சியில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் 6 மணி நேரம் சோதனை

தங்கவயல் நகராட்சியில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் 6 மணி நேரம் சோதனை


UPDATED : நவ 17, 2026 12:00 AM

ADDED : நவ 16, 2026 11:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 12:00 AM ADDED : நவ 16, 2026 11:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: தங்கவயல் நகராட்சியின் முறைகேடுகள் தொடர்பாக லோக் ஆயுக்தா அதிகாரிகள் நேற்று ஆறு மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.

தங்கவயல் நகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கோலார் லோக் ஆயுக்தாவுக்கு புகார்கள் சென்றன. அதன்படி, கோலார் மாவட்ட லோக் ஆயுக்தா அதிகாரிகள் நேற்று தங்கவயல் நகராட்சி அலுவலகத்திற்கு காலை 11:00 மணிக்கு வந்திருந்தனர்.

தங்களின் கவனத்திற்கு வந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக, பல கோப்புகளை கேட்டு பெற்றனர். அதில் உள்ள குளறுபடிகளை கண்டறிந்தனர். சந்தேகத்துக்குரிய கோப்புகள் பற்றி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர்.

வரி பாக்கி, நகராட்சி கடைகள், கட்டடங்களின் கட்டண பாக்கி வசூல், நகராட்சி மூலம் வழங்கப்பட்ட நல உதவி திட்டங்கள், அதன் பயனாளிகள் விபரம், நடைபாதை வியாபாரிகளுக்கு அளித்த கடனுதவி, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகை, வீட்டு மனைகள் ஒதுக்கீடு உட்பட பல்வேறு விபரங்களை கேட்டறிந்தனர். சில கோப்புகளை கையோடு எடுத்துச் சென்றனர்.

இதில், புல் மார்க்கெட் கடைகள் இடிப்பு விபரம், ஏற்கனவே அங்கு இருந்த கடைகள் பாக்கியை வசூலிக்க தவறியது உள்ளிட்ட கோப்புகள் பற்றிய விபரங்களை கோலார் லோக் ஆயுக்தா அதிகாரிகள் விசாரித்தனர்.

நேற்று மாலை 5:00 மணி வரை மொத்தம் ஆறு மணி நேரம், லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய ஆய்வு பணிகள் பரபரப்பை ஏற்படுத்தின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us