/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ராமர் இட்ட கட்டளை: 7 கிராமங்களுக்கு தெய்வமான ஹனுமன்
/
ராமர் இட்ட கட்டளை: 7 கிராமங்களுக்கு தெய்வமான ஹனுமன்
ராமர் இட்ட கட்டளை: 7 கிராமங்களுக்கு தெய்வமான ஹனுமன்
ராமர் இட்ட கட்டளை: 7 கிராமங்களுக்கு தெய்வமான ஹனுமன்
ADDED : அக் 28, 2025 04:25 AM

- நமது நிருபர் - ராமரின் சொல்லை கேட்டு, ஏழு கிராம மக்களின் தெய்வமாக ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். ஆம்... விஜயபுரா மாவட்டம், முத்தேபிகலின் எலகூர் கிராமத்தில் அமைந்து உள்ளது எலகுரேஸ்வரர் ஆஞ்சநேய சுவாமி கோவில்.
காவல் வசிஷ்ட ராமாயணத்தில், கிருஷ்ணா ஆற்றங்கரை அருகே ராமர் வந்தார். இங்குள்ள எலகூர், பூதிஹால், காசினா, ஹுந்தி, மசுர்தி, சந்திரகிரி, ஆலாலதிண்டி ஆகிய ஏழு கிராமங்களுக்கு காவலாக நின்று அருள்பாலிக்கும்படி, ஹனுமனுக்கு உத்தரவிட்டார். அவரின் சொல்லை ஏற்று, ஹனுமனும் இன்றும் அருள்பாலித்து வருகிறார்.
இப்பகுதி மக்கள் கூற்றுப்படி, இக்கோவிலின் வடமேற்கு திசையில், கோனிகெரே அமைந்திருந்தது. அதன் அருகில் பெரிய பாறைகளுக்கு இடையே, ஸ்ரீ வெங்கடேஸ்வரர் - ஸ்ரீதேவி கோவில் கட்டியிருந்தனர். முஸ்லிம் ஆட்சி காலத்துக்கு பின், இக்கோவிலின் அர்ச்சகருக்கு கனவு வந்தது. அதில் தோன்றிய ஹனுமன், இந்த பாறையில் தான் மறைந்திருப்பதாக கூறி மறைந்தார்.
மறுநாள் காலையில், ஹனுமன் குறிப்பிட்ட பாறையை அவசர அவசரமாக உடைத்தபோது, அதில் இருந்த ஹனுமன் சிலை, பல துண்டுகளாக உடைந்தது. இதை பார்த்து அர்ச்சகர் வேதனை அடைந்தார்.
ஒன்றிணைந்தது அன்றிரவு மீண்டும் அவருக்கு கனவு வந்தது. அதில், 'உடைந்த கற்களை, தற்போது உள்ள கோவிலுக்கு எடுத்து வரும்படியும், உடைந்த கற்களை ஒன்றாக அடுக்கி வைத்து கதவை மூடிவிடவும். ஏழு நாட்களுக்கு பின், மீண்டும் கதவை திறந்தால், முழு உருவமாக மாறியிருக்கும்' என்று கனவில் வந்த ஹனுமன் கூறினார்.
இதன்படி செய்த அர்ச்சகருக்கு, ஆறாம் நாள் துாக்கம் வரவில்லை. உடைந்த கற்கள் எப்படி ஒன்றாகும் என்று அறிய ஆசைப்பட்டார். கதவை திறந்து பார்க்க விருப்பப்பட்டார். அதன்படி மறுநாள், அதாவது ஏழாம் நாள் காலையில் கதவை திறந்தார். சிலையின் மேல்பகுதிகள் அனைத்தும் சரியாக இணைந்திருந்தது. கீழ்பகுதியின் சில பாகங்கள் இணையாமல் இருந்ததை பார்த்து வேதனை அடைந்தார்.
அன்று இரவும் கனவில் தோன்றிய ஹனுமன், முறைப்படி வேத பாராயணம் கற்றுக்கொண்டு, கிருஷ்ணா ஆற்றில் இருந்து தினமும் தண்ணீர் எடுத்து வந்து, தனக்கு அபிஷேகம் செய்யும்படி கூறினார். அதன்படி அவர் செய்தார். இதையடுத்து விக்ரகம் முழு வடிவம் பெற்றது. இன்றும் கூட கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
480 ஏக்கர் நிலம் அதன்பின் வந்த மராட்டிய மன்னர் ஸ்ரீபாஜிராவ், கோவில் பராமரிப்புக்கென, 480 ஏக்கர் நிலத்தை வழங்கி, ஒரு நாள் கூட தவறாமல், தினமும் பூஜைகள் நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த கோவிலுக்கு ஏழு கிராமத்தினர் மட்டுமின்றி, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். நம்முடன் பேசும் ஹனுமன் என்றும் கூறுகின்றனர். நாம் நினைத்த காரியம் நிறைவேற, ஹனுமனிடம் பூ வைக்க வேண்டும். பூ வலதுபுறமாக விழுந்தால் நிறைவேறும் என்றும்; இடது புறமாக விழுந்தால் நடக்காது என்றும் அர்த்தம்.
கொரோனா காலத்தின் முதல் ஊரடங்கின்போது, பக்தர் ஒருவர் வேண்டினார். அவருக்கு பூ எந்த பக்கமும் விழவில்லை. இரண்டாவது ஊரடங்கிலும் வேண்டினார்; அப்போதும் விழவில்லை. இதன் பின் ஊரடங்கு முடிந்த பின் வேண்டியபோது, வலதுபுறமாக பூ விழுந்ததாக கோவில் அர்ச்சகர் நாராயண ஹனுமந்தப்பா பூஜார் தெரிவித்தார்.
கோவிலில் பிராமணர்கள் கமிட்டி உறுப்பினர்களாக இருந்தாலும், சத்ரியர்களே பூஜை செய்து வருகின்றனர்.

