தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ லாரி விபத்துக்குள்ளாகி ஓட்டுநர் காயம் தர்பூசணியை அள்ளி சென்ற பொதுமக்கள்

 லாரி விபத்துக்குள்ளாகி ஓட்டுநர் காயம் தர்பூசணியை அள்ளி சென்ற பொதுமக்கள்

 லாரி விபத்துக்குள்ளாகி ஓட்டுநர் காயம் தர்பூசணியை அள்ளி சென்ற பொதுமக்கள்


ADDED : மார் 05, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொட்டபல்லாபூர்: மார்ச் 5-: தர்பூசணி ஏற்றிச் சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானதில், ஓட்டுநர் காயமடைந்தார். சிதறி கிடந்த தர்பூசணிகளை மக்கள் அள்ளிச் சென்றனர்.

பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகா, மேஷ்ட்ருமனே சதுக்கம் அருகே, நேற்று காலை தர்பூசணி ஏற்றிய லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை நடுவே சாய்ந்து விழுந்தது.

இதில், ஓட்டுநர் வேதமூர்த்தி, 22, பலத்த காயமடைந்தார். விழுந்த வேகத்தில் லாரியில் இருந்த தர்பூசணிகள் சாலை முழுதும் சிதறி விழுந்தன.

இதை கண்ட அப்பகுதி யினரும், வாகனத்தில் சென்றவர்களும் தர்பூசணிகளை அள்ளிச் சென்றனர். அதேநேரத்தில், காயமடைந்து கிடந்த ஓட்டுநரை யாரும் கண்டு கொள்ளவில்லை.

சாலை நடுவில் லாரி விழுந்ததால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த தொட்டபல்லாபூர் போலீசார், காயமடைந்த ஓட்டுநரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெருக்கடியை சரி செய்தனர்.

இது தொடர்பாக, வழக்கு பதிவாகிஉள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us