/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உரிமையாளர் நாயை அடித்து கொன்ற வேலைக்காரி கைது
/
உரிமையாளர் நாயை அடித்து கொன்ற வேலைக்காரி கைது
ADDED : நவ 04, 2025 04:49 AM
பாகலுார்:  வீட்டு உரிமையாளரின் நாயை தரையில் துாக்கி போட்டு, உதைத்து கொன்ற வேலைக்காரப் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு பாகலு ாரில் வசிப்பவர் ராஷி பூஜாரி. இவர் வீட்டில், 'கூபி' என்ற பெயரில் நாய் வ ளர்த்து வருகிறார். இந்த நாயை பார்த்து கொள்ள, புஷ்பலதா என்பவரை நியமித்து உள்ளார்.
அக்., 31ம் தேதி நாயை நடைபயிற்சிக்கு புஷ்பலதா அழைத்து சென்றார். பின், வீட்டுக்கு திரும்பும்போது, நாய் இறந்துவிட்டதாக, ராஷி பூஜாரியிடம் தெரிவித்தார்.
சந்தேகம் அடைந்த ராஷி பூஜாரி, குடியிருப்பு பகுதி, லிப்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அப்போது, லிப்டிற்குள் நாயை அழைத்து வந்த புஷ்பலதா, நாயின் கழுத்தில் கட்டப்பட்ட பெல்ட்டுடன் நாயை துாக்கி தரையில் வீசினார். பின், அதை காலால் உதைத்தார். சிறிது நேரத்தில் நாய் இறந்தது தெரியவந்தது.
இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார். பலரும் புஷ்பலதாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையடுத்து, பாகலுார் போலீசில் ராஷி பூஜாரி புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், புஷ்பலதாவை கைது செய்தனர்.

