/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹள்ளிக்கார் இன காளைகள் மாலுார் விவசாயி ஆர்வம்
/
ஹள்ளிக்கார் இன காளைகள் மாலுார் விவசாயி ஆர்வம்
ADDED : அக் 27, 2025 03:37 AM
மாலுார்: ஹள்ளிக்கார் இன மாடுகள் மறைந்து வரும் வேளையில், மாலுார் தாலுகா சேக்திரேன ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற விவசாயி, அந்த இன காளைகளை வளர்த்து வருகிறார்.
நவீன யுகத்தில் விவசாயிகள், தங்கள் வயல்களை உழுவதற்கு டிராக்டர்கள் மற்றும் பிற உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர். காளைகளை வளர்ப்போர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இருப்பினும் விவசாயி வெங்கடேஷ், இன்னும் மூன்று ஜோடி 'ஹள்ளிக்கார் எருது'களை வளர்த்து வருகிறார்.
நாட்டில் சிறந்த இனமான ஹள்ளிக்கார் இன காளைகள் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. ஏர் உழுதல், சுமை இழுப்பதில் இந்த காளைகளுக்கு இணையாக வேறு எந்த இனமும் இல்லை. இந்த இன காளைகள் நன்றாக வளர்க்கப்பட்டால், அதை பார்ப்பதே ஒருவித மகிழ்ச்சியை தரும் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
இந்த இன காளைகள் மறைந்து விடாமல் இருக்க, 32 லட்சம் ரூபாய் செலவிலான மூன்று ஜோடி காளைகளை வளர்த்து வருவதாக விவசாயி வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
ஹள்ளிக்கார் காளைகள் விவசாயத்திற்கோ அல்லது பொருட்களை கொண்டு செல்வதற்கோ பயன்படுத்தப்படுவதில்லை.
இனப்பெருக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இக்காளைகள் மிகுந்த கவனத்துடன் வளர்க்கப்படுகின்றன. கண்காட்சிகளிலும் பார்க்கலாம்.
கொண்டைக்கடலை, அரிசி, சோளம், பால், முட்டை, பச்சைப்புல் உள்ளிட்ட சத்தான உணவு அளிக்கப்படுகிறது. இதனால் மிகவும் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இவரது கொள்ளு தாத்தா காலத்தில் இருந்தே விவசாயம் குடும்பத் தொழிலாக இருந்து வருகிறது. 89 வயதான இவர், இத்தகைய காளைகளை வளர்க்க தன் குடும்பத்தினரை ஊக்குவித்து வருகிறார். 'தங்கள் குடும்பத்தின் லட்சுமி' என்றே வர்ணிக்கின்றனர்.

