/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போதையில் வாகனங்களை சேதப்படுத்தியவருக்கு வலை
/
போதையில் வாகனங்களை சேதப்படுத்தியவருக்கு வலை
ADDED : ஏப் 19, 2025 05:32 AM

கே.ஆர்.புரம்,: மது போதையில் சாலையில் வந்த வாகனங்களை சேதப்படுத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு, கே.ஆர்., புரம் சந்தை மைதானம் பகுதியில் உள்ள சாலையில் வந்த வாகனங்களின் கண்ணாடியை, மது போதையில் இருந்த நபர் ஒருவர் ஆயுதத்தால் தாக்கினார். இதில், ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடி உடைந்தன.
இச்சம்பவம் நேற்று காலையில் நடந்துள்ளது. அவரை தடுக்க சென்றவர்கள் மீதும் தாக்குதல் நடத்த முயற்சித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த கே.ஆர்., புரம் போலீசாரை பார்தததும், அந்நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அந்நபர் வாகனங்களை உடைக்கும் வீடியோவை முகநுாலில் நாகேஷ் என்பவர் பதிவிட்டு உள்ளார். இதை அறிந்த போலீசார் வீடியோ மூலம் விசாரித்ததில், அந்நபர் தேவசந்திராவில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் சுபியன், 25, என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.