/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நகைக்கடை உரிமையாளரிடம் மோசடி செய்தவர் கைது
/
நகைக்கடை உரிமையாளரிடம் மோசடி செய்தவர் கைது
ADDED : ஜூலை 08, 2025 11:56 PM
ஜெயநகர் : தங்க நகைக்கடை உரிமையாளரிடம் நகைகளை, 'ஆட்டை' போட்டவரை போலீசார் கைது செய்தனர். 2.50 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டன.
பெங்களூரு ஜெயநகரின், மூன்றாவது பிளாக்கில், தங்க நகைக்கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர், ஜெயநகர் ஒன்றாவது பிளாக்கில் தங்க நகைகள் தயாரிக்கும் மனிஷ்குமார் சோனியிடம், தங்க கட்டிகளை கொடுப்பார். இவரும் கட்டிகளை உருக்கி, தங்க நகைகள் தயாரித்து தருவார். நான்கு ஆண்டுகளாக, விதவிதமான நகைகளை தயாரித்து கொடுத்துள்ளார்.
சமீபத்தில் நகைகள் தயாரிப்பதற்காக, 8.3 கிலோ தங்கக்கட்டிகளை வாங்கிய மனிஷ்குமார், நகைகளை செய்து தரவில்லை. கட்டிகளையும் திருப்பித் தரவில்லை. மனிஷ்குமார் சோனி தலைமறைவானார்.
இதுதொடர்பாக, ஜெயநகர் போலீஸ் நிலையத்தில், நகைக்கடை உரிமையாளர் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது, மனிஷ்குமார் சோனி, கோவாவில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
அங்கு சென்ற போலீசார், நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 8.53 லட்சம் ரொக்கம், 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டன. மிச்சமுள்ள நகைகளை மீட்க, போலீசார் முயற்சிக்கின்றனர்.