தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வெளிநாட்டினருக்கு 'பார்ட்டி' ஏற்பாடு செய்தவர் கைது

 வெளிநாட்டினருக்கு 'பார்ட்டி' ஏற்பாடு செய்தவர் கைது

 வெளிநாட்டினருக்கு 'பார்ட்டி' ஏற்பாடு செய்தவர் கைது


ADDED : பிப் 22, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 05:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொப்பால்: கொப்பால் அருகே, போலீசாரின் அனுமதியின்றி வெளிநாட்டினருக்கு விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்து கொடுத்த, ரிசார்ட் உரிமையாளர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.

கொப்பால் மாவட்டம் கங்காவதிக்கு சுற்றுலா வந்த இஸ்ரேலிய நாட்டு பெண், கடந்த ஆண்டு மார்ச் மாதம், மூன்று பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, கங்காவதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் ரிசார்ட்டுகளில் தங்கும் வெளிநாட்டினருக்கு, விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்து கொடுத்தால், போலீசார் அனுமதி பெறுவது கட்டாயம் என, எஸ்.பி., ராம் அரசித்தி உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், கடந்த, 16ம் தேதி கொப்பால் முனிராபாத் பகுதியில் ஓடும் துங்கபத்ரா ஆற்றின் கரையோரம், 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் ஒன்று கூடி பார்ட்டி நடத்தினர்.

குடிபோதையில் டி.ஜே., பாடலுக்கு குத்தாட்டமும் போட்டனர். இதற்கான ஏற்பாடுகளை முனிராபாத்தில் உள்ள, 'தி ஹம்பி கபே' ரிசார்ட்டின் உரிமையாளர் பியூஷ் செய்திருந்தார். ஆனால், அவர் போலீசாரின் அனுமதி பெறவில்லை.

வெளிநாட்டினர் குடிபோதையில் குத்தாட்டம் போட்ட வீடியோக்கள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, எஸ்.பி., உத்தரவில், ரிசார்ட் உரிமையாளர் பியூஷ் மீது, முனிராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us