/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமைச்சர் ஹெச்.கே.பாட்டீலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
/
அமைச்சர் ஹெச்.கே.பாட்டீலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
அமைச்சர் ஹெச்.கே.பாட்டீலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
அமைச்சர் ஹெச்.கே.பாட்டீலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : டிச 21, 2025 05:16 AM

கதக்: சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீலுக்கு, கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன் மங்களூரு, கதக் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதேபோன்று சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீலுக்கும் கொலை மிரட்டல் வந்தது. முகநுாலில் வீரண்ணா பீளகி, 35, என்பவர், அமைச்சர் ஹெச்.கே.பாட்டீலை தகாத வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். அவரை நிற்க வைத்து, ஏ.கே.47 துப்பாக்கியால் குண்டு மழை பொழிய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இவரது போஸ்ட், சமூக வலைதளங்களில் பரவியது. இதை பார்த்த காங்கிரஸ் பிரமுகர் பி.பி.அசூடி என்பவர், கதக் நகரின் பெடகேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை பதிவு செய்து விசாரித்த போலீசார், ரோணா தாலுகாவின் சூடி கிராமத்தை சேர்ந்த வீரண்ணா பீளகிவை கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்துகின்றனர்.
'சமூக வலைதளங்களில், சர்ச்சைக்குரிய வகையில் கருத்து க்களை வெளியிடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டா யம்.
இத்தகைய போஸ்ட்டுகள் சமுதாயத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அபாயத்தை ஏற்படுத்தும்' என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

