/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'மாஜி' காதலியுடனான படங்கள் பரப்பியவருக்கு அடி, உதை
/
'மாஜி' காதலியுடனான படங்கள் பரப்பியவருக்கு அடி, உதை
'மாஜி' காதலியுடனான படங்கள் பரப்பியவருக்கு அடி, உதை
'மாஜி' காதலியுடனான படங்கள் பரப்பியவருக்கு அடி, உதை
ADDED : நவ 10, 2025 04:26 AM
சிக்கபல்லாபூர்: பழைய காதலியுடனான போட்டோக்களை, ஊராருக்கு அனுப்பி தொந்தரவு கொடுத்த இளைஞரை, பெண்ணின் உறவினர்கள் அடித்து, உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சிக்கபல்லாபூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகாவின், கடமாச்சனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த், 28. இவருக்கு திருமணமாகி, மனைவி இருந்தும், அதே கிராமத்தில் வசிக்கும் ஷிராவணி, 22, என்பவரை காதலித்தார். இருவரும் சேர்ந்து ஊர் சுற்றினர். நெருக்கமாக போட்டோக்கள் எடுத்து கொண்டனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன், இவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்தனர். இதற்கிடையே ஷிராவணி, இரண்டு மாதங்களுக்கு முன், வேறொரு இளைஞரை திருமணம் செய்து கொண்டார். தன்னை ஒதுக்கி தள்ளிவிட்டு, வேறொருவரை திருமணம் செய்து கொண்ட ஷிராவணியை பழி வாங்க ஆனந்த் திட்டம் தீட்டினார்.
அவருடன் நெருக்கமாக உள்ள போட்டோக்களை, ஊரில் உள்ளவர்களுக்கு அனுப்பினார். இது சமூக வலைதளங்களிலும் பரவியது. இதனால் ஷிராவணியின் உறவினர்கள் கோபமடைந்தனர். நேற்று மதியம் ஆனந்தை பிடித்து, நன்றாக உதைத்து சிந்தாமணி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தன்னுடைய போட்டோக்களை பரப்பி, கவுரவத்துக்கு களங்கம் ஏற்படுத்தியதாக, ஆனந்த் மீது ஷிராவணி புகார் அளித்தார். தன் மீது தாக்குதல் நடத்தியதாக, ஆனந்தும் பதில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

