/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறுமியை கடத்தி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
/
சிறுமியை கடத்தி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை கடத்தி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை கடத்தி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : ஆக 15, 2025 05:11 AM
கொப்பால்: கொப்பால் நகரின், அளவன்டி கிராமத்தில் வசிப்பவர் ராஜாசாப் ஹள்ளகேரி, 34. இவர் இதே பகுதியில் வசிக்கும், 15 வயது சிறுமியை காதலிப்பதாக நாடகமாடினார். 2022ல் சிறுமியை கடத்தி சென்று, திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின் சுள்ளியாவில், இதற்கு முன் வேலை பார்த்த சிமென்ட் கடையில் வேலையில் சேர்ந்தார். கடையின் பின்புறம் வசித்தனர். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதற்கிடையே சிறுமி கடத்தப்பட்டது குறித்து, குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், சிறுமியை கண்டுபிடித்து மீட்டனர். ராஜாசாப்பை கைது செய்தனர். கொப்பால் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
ராஜாசாப்புக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி குமார் நேற்று தீர்ப்பளித்தார்.