தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ராஜஸ்தான் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது

ராஜஸ்தான் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது

ராஜஸ்தான் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது


UPDATED : நவ 06, 2026 07:15 PM

ADDED : நவ 05, 2026 07:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:15 PM ADDED : நவ 05, 2026 07:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மது போதையில் இருந்த ராஜஸ்தானை சேர்ந்த இளம் பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்த இளம்பெண், அக்., 4ம் தேதி பெங்களூரு வந்திருந்தார். பெங்களூரு – ஓசூர் சாலையில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்தார். பின், கம்மனஹள்ளியில் உள்ள நண்பரின் வீட்டில் 10 நாட்கள் தங்கிவிட்டு, மீண்டும் அதே ஹோட்டலுக்கு சென்றார்.

அக்., 24ம் தேதி இரவு கோரமங்களாவில் உள்ள ஒரு மதுபான கிளப்பிற்கு சென்றார். சிகரெட் புகைக்கும் பழக்கம் கொண்ட இளம்பெண், அருகில் இருந்த சமீர் என்பவரிடம், ‘லைட்டர்’ கேட்டுள்ளார். சமீரும் லைட்டர் கொடுத்ததுடன், அவருடன் பேசி, பழக்கமானார்.

இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தபோது, லாட்ஜில் மது அருந்தலாம் என இளம்பெண்ணை அழைத்தார். அவரும், சமீருடன் லாட்ஜுக்கு சென்றார். அங்கு, இருவரும் மது அருந்தினர். மயக்கமடைந்த இளம்பெண்ணை, சமீர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த அவர், அக்., 28ம் தேதி, மடிவாளா போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், சமீரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us