தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கொலை வழக்கில் தேடப்பட்டவர் 9 ஆண்டுகளுக்கு பின் கைது

 கொலை வழக்கில் தேடப்பட்டவர் 9 ஆண்டுகளுக்கு பின் கைது

 கொலை வழக்கில் தேடப்பட்டவர் 9 ஆண்டுகளுக்கு பின் கைது


ADDED : மார் 10, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 06:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டி.ஜே.ஹள்ளி: மங்களூரில் கொலை, வழிப்பறி உட்பட பல வழக்குகளில், ஒன்பது ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை, சி.சி.பி., போலீசார் கைது செய்தனர்.

பல்லாரியைச் சேர்ந்தவர் சுபியான் என்ற கோட்ராஷி, 31. கடந்த 2012 ல் பல்லாரியின் புரூஸ்பேட் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வயதான பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்தார்.

போலீசில் காட்டி கொடுத்து விடுவார் என அஞ்சிய அவர், மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்றார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

சிறையில் ரவுடி சப்வான் உசேன் மற்றும் அவரின் கூட்டாளிகளுடன் பழக்கம் ஏற்படுத்தி கொண்டு, அவர்களின் உதவியுடன் ஜாமின் பெற்றார்.

சப்வான் உசேனுடன் மங்களூரு வந்து அவரின் குழுவில் இணைந்தார். கடந்த 2017 பாஜ்பே போலீஸ் நிலைய எல்லைக்குள் ஒருவரை மிரட்டி பணம் பறித்தார்.

2017ல் சூரத்கல்லை சேர்ந்த லெப்பி சப்வான் கொலை வழக்கிலும், வழிப்பறி வழக்கிலும் சிக்காமல் இருக்க கலபுரகி, பல்லாரி, மும்பை, ஆந்திராவுக்கு தப்பியவர், கடைசியாக பெங்களூரு வந்தார்.

இங்கு வந்ததும் சுபியான் என்ற தன் பெயரை, முகமது உசேன் என மாற்றிக் கொண்டார்.

அதே பெயரில் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் பெற்றதுடன், பெங்களூரை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து, டி.ஜே.,ஹள்ளியில் உள்ள ஷியாம்பூர் ரயில்வே கேட் அருகில் வசித்து வந்தார்.

இது குறித்து சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. நேற்று காலை அங்கு சென்ற போலீசார், சுபியானை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us