/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சேர்ந்து வாழ்ந்த பெண்ணை கொலை செய்தவர் தற்கொலை: 'லிவிங் டு கெதர்' உறவில் கொலை, தற்கொலை

ADDED : டிச 03, 2025 06:42 AM
பெங்களூரு: 'லிவிங் டு கெதர்' உறவில் ஏற்பட்ட தகராறில், பெண்ணை கொலை செய்துவிட்டு ஆண் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு இந்திரா பிரியதர்ஷினி நகரில் லட்சுமி நாராயணன், 51, லலிதா, 49, 'லிவிங் டு கெதர்' உறவில் வாழ்ந்து வந்தனர். லலிதா வேறு யாருடனாவது தொடர்பில் இருக்கிறாரா என நாராயணனுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது. நேற்று அதிகாலை வீட்டில் தனியாக இருந்த லலிதாவின் கழுத்தை நெரித்து நாராயணன் கொலை செய்தார். இதையடுத்து, அவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்காததால், அக்கம் பக்கத்தினர் கதவை தட்டினர். இருப்பினும், கதவு திறக்கப்படவில்லை. ராஜகோபாலன் நகர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார், இறந்த நிலையில் கிடந்த இருவர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பினர்.