/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மடாதிபதியிடம் திருடியவர் 7 ஆண்டுகளுக்கு பின் போலீசாரிடம் கைது
/
மடாதிபதியிடம் திருடியவர் 7 ஆண்டுகளுக்கு பின் போலீசாரிடம் கைது
மடாதிபதியிடம் திருடியவர் 7 ஆண்டுகளுக்கு பின் போலீசாரிடம் கைது
மடாதிபதியிடம் திருடியவர் 7 ஆண்டுகளுக்கு பின் போலீசாரிடம் கைது
ADDED : ஜூன் 28, 2025 11:03 PM

ஹாசன்: கோடி மடத்தின் மடாதிபதி சிவானந்த சிவயோகி ராஜேந்திர சுவாமிகளின் தங்க நகைகள், பணத்தை திருடிய நபர், ஏழு ஆண்டுகளுக்கு பின், போலீசாரிடம் சிக்கினார்.
ஹாசன் மாவட்டம், அரசிகெரேவில் உள்ள கோடி மடத்தின் மடாதிபதி சிவானந்த சிவயோகி ராஜேந்திர சுவாமிகள், 2018ல் ரயிலில் பாகல்கோட்டில் இருந்து, அரசிகெரேவுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர் தோல்பையில் தங்க நகைகள், பணம் வைத்திருந்தார். அதை பக்கத்தில் வைத்துக் கொண்டு, உறக்கத்தில் ஆழ்ந்தார்.
அதிகாலை உறக்கம் கலைந்து எழுந்து பார்த்தபோது, பை மாயமாகி இருந்தது. இதில் 1.62 லட்சம் ரொக்கம், 250 கிராம் தங்கச்செயின், கவுரி சங்கர ருத்ராட்சம், பதக்கம், 50 கிராம் எடையுள்ள இரண்டு தங்க மோதிரங்கள் இருந்தன. இதுகுறித்து, அரசிகெரே போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தார்.
விசாரணை நடத்திய போலீசார், ஏழு ஆண்டுகளுக்கு பின், ஜிதேந்திரா, 37, என்பவரை கண்டுபிடித்து நேற்று முன் தினம் கைது செய்தனர்.
இவர் ரயில்களில் ஏ.சி., கோச்சில் பயணம் செய்யும் பணக்கார பயணியரை குறிவைத்து திருடி வந்தது, விசாரணையில் தெரிந்தது. இவரிடம் இருந்து பொருட்களை மீட்கும் நோக்கில், தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.