/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.2.50 கோடி செலவில் மங்களூரு கடற்கரை திருவிழா
/
ரூ.2.50 கோடி செலவில் மங்களூரு கடற்கரை திருவிழா
ADDED : டிச 04, 2025 05:48 AM
மங்களூரு: மங்களூரு கடற்கரை திருவிழா 2.50 கோடி ரூபாய் செலவில், வரும் 20ம் தேதி முதல் ஜனவரி 4ம் தேதி வரை நடக்க உள்ளது.
கர்நாடக கடற்கரை பகுதிகளில், மங்களூரில் நடக்கும் கடற்கரை திருவிழா மிகவும் பிரபலமானது. இதில், பங்கேற்க பல மாநிலங்களில் இருந்தும், சுற்றுலா பயணியர் வருகை தருவர்.
இங்கு கலாசார, கடற்கரை விழா, ஹெலிகாப்டர் சவாரி, கலை சிற்பம், நடன விழா, மலர் கண்காட்சி என கடற்கரை மொத்தமும் திருவிழா கோலமாக காட்சி அளிக்கும்.
அதிலும், காற்றாடி திருவிழாவை பார்ப்பதற்கே பிரமாண்டமாக இருக்கும். வானில் பறக்கும் ராட்சத காற்றாடிகளை பார்ப்பதற்கு அருமையாக இருக்கும்.
இந்த திருவிழா வரும் 20ம் தேதி தொடங்கி, ஜனவரி 4ம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இம்முறை 16 நாட்கள் நடக்கும். ஜனவரி 1 - ஆங்கில புத்தாண்டு தினத்தன்று கொண்டாட்டங்கள் பிரமாண்டமாக இருக்கும்.
இந்த ஆண்டு ஒவ்வொரு நாளும் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
ஜன., 3, 4 ஆகிய நாட்களில் கன்னட திரையுலகினர், பாலிவுட் நட்சத்திரங்கள் வர உள்ளனர். இசை கச்சேரியும் நடக்கிறது. இதற்கு 2.50 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.

