/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
துப்பாக்கி சூட்டில் மிரட்டும் மங்களூரு 'ரைபிள் கிளப்'
/
துப்பாக்கி சூட்டில் மிரட்டும் மங்களூரு 'ரைபிள் கிளப்'
துப்பாக்கி சூட்டில் மிரட்டும் மங்களூரு 'ரைபிள் கிளப்'
துப்பாக்கி சூட்டில் மிரட்டும் மங்களூரு 'ரைபிள் கிளப்'
ADDED : டிச 05, 2025 09:00 AM

மங்களூரில் மேம்படுத்தப்பட்ட துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் திறக்கப்பட்டு உள்ளது.
தட்சிண கன்னடாவின் மங்களூரில், துப்பாக்கி சுடுதல் மீதான ஆர்வம் பலருக்கும் அதிகரித்து உள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்பதற்கு அனைத்து வயதினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுவும் மங்களூரின் புகழ் பெற்ற, 'மங்களூரு ரைபிள் கிளப்'பில் இணைந்து பயிற்சி எடுக்க பலரும் விரும்புகின்றனர்.
கடந்த 2017ம் ஆண்டு மங்களூரு ரைபிள் கிளப் துவங்கப்பட்டது. ஒலிம்பிக் விளையாட்டுகளில் உள்ளூர் வீரரை பங்கேற்க செய்வதே இந்த கிளப்பின் நோக்கம் ஆகும். இளைஞர்களுக்கு தகுதியான பயிற்சி அளித்து, அவர்களை முழு நேர துப்பாக்கி சுடும் வீரராக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த கிளப்பில், இந்திய துப்பாக்கி சுடுதல் அணியில் தேர்வு
செய்யப்பட்ட மூன்று வீரர்கள் பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிளப்பில் உள்ளவர்கள் பலரும் மாநில அளவிலான போட்டிகளில் சாதித்து வருகின்றனர்.
இவர்கள், தங்கள் கிளப்பிற்காக புதிய துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தை அமைத்துள்ளனர்.
இது, சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது. மின்னணு மற்றும் மேம்படுத்தப்பட்ட முறையில் புதிய பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், ஒரே நேரத்தில் ஏழு பேர் நின்று சுடலாம். 10 மீட்டர் இடைவெளியில் ரைபிள், பிஸ்டல் ஆகிய இரண்டு துப்பாக்கிகளையும் பயன்படுத்தி பயிற்சிகள் மேற்கொள்ளலாம்.
இந்த பயிற்சி மையம், துப்பாக்கி சுடும் வீரர்களின் பயிற்சிக்கு உகந்ததாக இருக்கும். இதன் மூலம் மங்களூரில் இருக்கும் வீரர்கள், தங்கள் பயிற்சிக்காக வெளியூர்களுக்கு செல்ல தேவையில்லை. உள்ளூரிலே மேம்பட்ட முறையில் பயிற்சி எடுத்து கொள்ளலாம்.
- நமது நிருபர் -

