/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மஞ்சாராபாத் கோட்டை சுவர் தொடர் மழையால் இடிந்தது
/
மஞ்சாராபாத் கோட்டை சுவர் தொடர் மழையால் இடிந்தது
ADDED : ஆக 04, 2025 05:21 AM

ஹாசன்: படை வீரர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட 'மஞ்சாராபாத் கோட்டை'யின் ஒரு பக்க சுவர், கன மழையில் இடிந்து விழுந்தது.
ஹாசன் மாவட்டம் சக்லேஸ்பூரில், 1792 ல் தனது படை வீரர்கள் தங்குவதற்காக நட்சத்திரம் வடிவில் மஞ்சாராபாத் கோட்டை கடல் மட்டத்தில் இருந்து 988 மீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது.
மேக மூட்டம் இல்லாமல் இருந்தால், அங்கிருந்தபடி அரபிக் கடலை பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. மலை அடிவாரத்தில் இருந்து 252 படிக்கட்டுகளை ஏறி சென்றால், இந்த கோட்டையை அடையலாம். 1956 முதல் இந்த கோட்டையை, இந்திய தொல்லியல் துறையினர் பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த கோட்டைக்கு, செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் பெய்த மழையில், நட்சத்திர வடிவில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
நேற்று காலை ஆய்வு செய்த செக்யூரிட்டி, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதையடுத்து, நேற்று சுற்றுலா பயணியருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பலர் வருத்தத்துடன் திரும்பி சென்றனர்.