டி.ஐ.பி.ஆர்., செயலராக மஞ்சுநாத் ஐ.ஏ.எஸ்., நியமனம்
டி.ஐ.பி.ஆர்., செயலராக மஞ்சுநாத் ஐ.ஏ.எஸ்., நியமனம்
ADDED : ஆக 06, 2026 09:29 PM
பெங்களூரு: டி.ஐ.பி.ஆர்., செயலராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி மஞ் சுநாத்தை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
பணியாளர், நிர்வாக சீர்திருத்த ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கன்னடா மற்றும் கலாசார துறை செயலராக பணியாற்றிய மஞ்சுநாத், டி.ஐ.பி.ஆர்., எனும் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்
திட்ட மிடல், திட்டங்களை கண்காணிக்கும் குழுவின் செயலர் - 2 ஆக பணியாற்றிய மனோஜ் ஜெயின், சிறுபான்மையினர் நல துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்
காத்திருப்போர் பட்டியலில் இருந்த திரிலோக் சந்திரா, திட்டமிடல், திட்டங்களை கண்காணிக்கும் குழுவின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்
காத்திருப்போர் பட்டியலில் இருந்த மஞ்சுஸ்ரீ, கன்னடா மற்றும் கலாசார துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்
காத்திருப்போர் பட்டியலில் இருந்த பூர்ணிமா, உணவு, பொது வினியோகம், நுகர்வோர் விவகாரங்கள் துறை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்
வணிக வரி துறை கூடுதல் கமிஷனர் அபர்ணா ரமேஷுக்கு, இ - கவர்னன்சுக்கு உட்பட்ட குடும்பா திட்ட இயக்குநர் பதவி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
