/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நாட்டு மாடு பாதுகாப்பை வலியுறுத்தி 4ம் தேதி நடைபயணம்
/
நாட்டு மாடு பாதுகாப்பை வலியுறுத்தி 4ம் தேதி நடைபயணம்
நாட்டு மாடு பாதுகாப்பை வலியுறுத்தி 4ம் தேதி நடைபயணம்
நாட்டு மாடு பாதுகாப்பை வலியுறுத்தி 4ம் தேதி நடைபயணம்
ADDED : டிச 31, 2025 07:00 AM
பெங்களூரு: நாட்டு மாடு பாதுகாப்பை வலியுறுத்தி, பெங்களூரில் வரும், 4ம் தேதி நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.
ஆரோக்கியம், சுற்றுச்சூழல், விவசாயம், வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டு செயல்படும், 'கோ பால்ஸ்' அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
ஐக்கிய நாடுகள் அமைப்பு 2026ம் ஆண்டை, மேய்ச்சல் நிலங்கள் மற்றும் மேய்ச்சல் சமூகங்களுக்கான சர்வதேச ஆண்டாக அறிவித்து உள்ளது.
அதை முன்னிட்டு நாட்டு மாடு பாதுகாப்பு, நாட்டு மாடு சார்ந்த இயற்கை விவசாயம், மாடு மேய்ப்பவர்கள் மற்றும் நாட்டு மாடு வளர்ப்போரை ஆதரிக்கும் வகையில், ஜனவரி. 4ம் தேதி, 'வாக்2ஹீல்' என்ற பெயரில், பெங்களூரில் எங்கள் அமைப்பு சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.
காலை 7:30 மணிக்கு கப்பன் பார்க்கில் உள்ள, கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் சங்க மைதானத்தில் இருந்து, நான்கு கி.மீ., துாரத்திற்கு நடைபயணம் இருக்கும்.
நடைப்பயணத்தில் பங்கேற்க, அனைத்து துறைகளின் தொழில்முறை நிபுணர்கள் வரவேற்கப்படுகின்றனர். பா.ஜ., ராஜ்யசபா எம்.பி., ஜக்கேஷ், ேஷாகோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, நாட்டு மாடு வளர்ப்பில் சிறப்பாக செயல்பட்ட விவசாயிகள், கோசாலைகளின் உரிமையாளர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.
நடைபயணத்தில் பங்கேற்போர் முன்பதிவு செய்து, அதன்மூலம் கிடைக்கும் நிதி மூலம், நாட்டு மாடு வளர்ப்போருக்கு உதவி செய்யப்படும். ரசாயனமற்ற விவசாயம் குறித்த விழிப்புணர்வுக்கு பயன்படுத்தப்படும். நடைபயணத்தில் பங்கேற்க விரும்புவோர் https://tinyurl.com/w2h26 என்ற இணைய முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். கலந்து கொள்வோருக்கு 'வாக்2ஹீல்' பெயர் பொறித்த டி சர்டுகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த பரிசு பொருட்கள் வழங்கப்படும்.
தேவைப்படுவோர் 81486 94359, 97426 21242, 99667 38644, 96325 61110 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

