தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிக்பேட்டில் பயங்கர தீ விபத்து: 50 கடைகளில் பொருட்கள் நாசம்

 சிக்பேட்டில் பயங்கர தீ விபத்து: 50 கடைகளில் பொருட்கள் நாசம்

 சிக்பேட்டில் பயங்கர தீ விபத்து: 50 கடைகளில் பொருட்கள் நாசம்


ADDED : பிப் 26, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 05:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்பேட்: சிக்பேட்டில் மூன்று மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் குடோன் உட்பட, 50 கடைகளில் உள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. தீயை அணைக்கும் பணியின் போது, தீயணைப்பு வீரர்கள் 5 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.

பெங்களூரின் இதய பகுதி என்று அழைக்கப்படும், மெஜஸ்டிக் அருகில் சிக்பேட் உள்ளது. தொழில் பகுதி என்று அழைக்கப்படும் சிக்பேட்டில் துணி, எலக்ட்ரானிக் பொருட்கள், பிளாஸ்டிக் விற்பனை உட்பட ஏராளமான கடைகள் உள்ளன.

மிகவும் குறுகலான பகுதியில் கூட புற்றீசல்கள் போன்று கடைகள் உள்ளன. இந்நிலையில், சிக்பேட் கும்பாரபேட்டில் மூன்று மாடி கட்டடத்தில் உள்ள, எலக்ட்ரானிக் பொருட்கள் குடோனில் இருந்து, நேற்று காலை 6:30 மணிக்கு திடீரென புகை கிளம்பியது.

சிறிது நேரத்தில் அந்த குடோன் முழுதும் தீப்பிடித்து எரிந்தது.

மக்கள் பீதி த கவல் அறிந்ததும் ஹலசூரு கேட் தீயணைப்பு நிலையத்தில் இருந்து, ஒரு தீயணைப்பு வாகனத்தில் வீரர்கள் அங்கு வந்தனர். அதற்குள் பக்கத்து கடைகள் மீதும் தீப்பிடித்தது. துணி, பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததால் தீ மளமளவென பரவியது. காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால், தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டனர்.

இதனால் அங்கு கூடுதலாக நான்கு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தீ விபத்து ஏற்பட்ட இடத்தை சுற்றியுள்ள குடியிருப்பில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்ற போதிலும், கரும்புகையாக அந்த இடமே காட்சி அளித்தது.

ஆக்சிஜன் சிலிண்டர், பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு, தீயணைப்பு வீரர்கள் கட்டடத்திற்குள் சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். 7 மணி நேரத்திற்கு பின், மதியம் 2:00 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.

165 கடைகள் தீயை அணைக்கும் மு யற்சியில் ஒரு வீரருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. புகையை சுவாசித்ததால் ஐந்து வீரர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

முதலுதவி சிகிச்சைக்கு பின், விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தீ விபத்து நடந்த கட்டடத்தில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் இல்லை.

அந்த கட்டடத்தில் 165 சிறிய கடை கள் இருந்தன. இதில் 50 கடைகளில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்தது தெரிந்து உள்ளது. ஹலசூரு கேட் போலீசார் விசாரிக்கின்றனர்.

கடந்த ஆண்டு இதே கும்பார்பேட் பகுதியில், குறுகிய கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தின் 5 பேர் உடல் கருகி இறந்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us