தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கழிவுகளை சேகரிக்க கட்டணம் வசூல் இறைச்சி கடையினர் போராட முடிவு

 கழிவுகளை சேகரிக்க கட்டணம் வசூல் இறைச்சி கடையினர் போராட முடிவு

 கழிவுகளை சேகரிக்க கட்டணம் வசூல் இறைச்சி கடையினர் போராட முடிவு


ADDED : செப் 01, 2026 09:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 09:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: இறைச்சி கடைகளில் கழிவுகளை சேகரிக்க, ஒரு கிலோவுக்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, இரண்டு நாட்கள் கடைகளை மூடிவிட்டு போராட்டம் நடத்த போவதாக, கர்நாடக கோழி வியாபாரிகள் சங்கம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவன ஊழியர்கள், இறைச்சி கடைகளில் கழிவுகளை சேகரிக்க ஒரு கிலோவுக்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். இறைச்சி கழிவுகள் பதப்படுத்தப்பட்டு வணிக ரீதியாக பயன்படுத்தப்படுகிறது.

எங்களிடமிருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் மூலம் பணம் சம்பாதிக்கப்படுகிறது. அதே சமயம், எங்களிடமிருந்தும் பணம் வசூலிக்கப்படுவது சரியல்ல. இதனால், எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இறைச்சி கழிவுகளிலிருந்து பணம் சம்பாதிக்கும் போது, எங்களுக்கும் அதிலிருந்து ஒரு பங்கு தருவதே நியாயம். ஆனால், இங்கு அனைத்தும் அநியாயமாகவே நடக்கிறது. இப்பிரச்னை குறித்து பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடாவிடம் புகார் அளித்தும் எந்த பயனுமில்லை.

இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டி இன்றும், நாளையும் பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்த உள்ளோம். இறைச்சி கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளை மூடிவிட்டு போராட்டத்தில்பங்கேற்பர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us